குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று டிசம்பர் 28, 2021 | Tuesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Dec 28, 2021 | Dinamalar
இடமிருந்து வலம்
1. சமீபத்தில் நடந்த இந்த ஏவுகணை பரிசோதனை வெற்றி.
2. ஊதுபத்தியை ஏற்றியதும் 'கம கம' என்று இது வீசியது.
3. காலபைரவரின் வாகனமாம் இது.
6. இரவில் விழித்திருக்கும் பறவை - கடைசி எழுத்து இல்லை.
13. வழி, பாதை என்றும் சொல்லலாம்.
16. 'நேற்று நீ சின்ன ---... இன்று நீ...' மேஜர் சந்திரகாந்த் திரைப்பட பாடல்.
20. வருங்கால பலனை --- கேட்டும் தெரிந்து கொள்வர்.
வலமிருந்து இடம்
5. அரசர்கள் வசிக்கும் மாளிகையை இப்படியும் சொல்லலாம் - சரியாக இல்லை.
8. மணப்பாறை என்றால் நினைவுக்கு வரும் தின்பண்டம்.
9. சுலபம் - எதிர்ச்சொல்.
10. இசைக் கச்சேரியில் கண்டிப்பாக இடம் பெறும் பானை வடிவ இசைக்கருவி.
11. பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்வது ஆபத்து என்று எவ்வளவு --- செய்தாலும் சிலர் கேட்பதில்லை.
15. அவ்வப்போது அத்தியாவசிய பொருட்களை சிலர் ---க்கி வைத்து தட்டுப்பாடு உண்டாக்குகின்றனர்.
மேலிருந்து கீழ்
1. பாதுகாப்பிற்காக பயன்படும் கோட்டை, மதில் போன்றவை.
2. கைக்கு எட்டியது ---க்கு எட்டவில்லை.
3. உணவின் சுவை அறிய உதவும் உறுப்பு.
5. கழுத்தோடு ஒட்டிய வாறு அணியப்படும் நகை.
6. முருகனின் --- தலங்கள் அறுபடை வீடு எனப்படும்.
11. இதில் வடை வைத்து எலி பிடிப்பர்.
14. காகிதமில்லாத முதல் அரசாக இது அசத்தல்.
கீழிருந்து மேல்
4. தப்பு செய்தவன் திருந்தினால் ---க்க வேண்டும்.
7. மலை ஊற்று.
8. '--- முடிச்சு' - பாக்யராஜ் இயக்கி, நடித்திருந்த திரைப்படம்.
12. நன்கு பணிபுரிந்தவர்களுக்கு ---த் தொகை கொடுத்து உற்சாகப்படுத்தினர்.
15. மளிகை கடையை ---கு கடை என்றும் சொல்வர்.
17. முகாம் நடத்தி தடுப்பூசி போட்டதில், தமிழகம் --- வகித்தது என புகழ்பெற்றது.
18. 'பொன்' என அர்த்தம் தரும் வேறொரு சொல்லை வைத்திருக்கும் இசைக்கருவி.
19. ஏக்கம் - வேறொரு சொல்.
Comments
Post a Comment