31/12/2021 | aanmeega malar kurukkeluthu potti | தினமலர் ஆன்மீக மலர் குறுக்கெழுத்து போட்டி


ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | டிசம்பர் 31, 2021 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | Dec 31, 2021 | Dinamalar Aanmeega Malar

இடமிருந்து வலம்

1. ஹரித்வாரில் இந்த விழா மிகப் பிரபலம் (5)
5. மூலவருக்கு வெள்ளிக்கவசம் அல்லது ---கவசம் சாத்துவது உண்டு (4)
6. 'சரவணபவ -- எனப்பாடு. சுகம்தரும் வழிதனை நீ தேடு' என்கிறது சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல் (2)
7. '------ நிறைகனி அப்பமொடவல் பொரி' என்பது திருப்புகழ் பாடல் வரி (4)
10. துரியோதனன் பாண்டவர்களைத் தன் ---யாக எண்ணினான் (3)
12. 'நமசிவாய வாழ்க, நாதன் ---- வாழ்க (2)
13. துரோணர் ஆசிரியர் என்றால் பாண்டவர்களும் கவுரவர்களும் -- (6)
14. சூரியனின் மனைவி (2)
16. பிரபல சக்தி பீடங்களில் ஒன்றான காமாக்யா கோயில் உள்ள மாநிலம் (3)
18. பீஷ்மர் போதித்த ஆயிரம் நாமங்கள் கொண்ட ஒரு பகுதி விஷ்ணு ------ (7)
21. நாம் ----- போலச் சுற்றுகிறோம். சாட்டை கடவுளின் கையில் (5)
22. உலகம் என்பதன் வேறு சொல் (4)

மேலிருந்து கீழ்

1. அம்மனுக்கு இதைக் கொண்டும் அர்ச்சனை செய்வதுண்டு (5)
2. விஸ்வாமித்திரருக்கும் இவருக்கும் பிறந்தவள் சகுந்தலை (3)
3. அகர----- எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு (3)
4. தமிழில் பெண் தெய்வங்களை அம்மன் என்போம். கேரளத்தில் -- (4)
8. நிதியை அருள்பவள்---- லட்சுமி (2)
9. பழநி முருகனின் ஆடை (4)
10. அமாவாசையன்று இது சேர்த்த நீரை முன்னோருக்கு அளிப்பர் (2)
11. பாண்டவர்களும் கவுரவர்களும் தங்களுக்கான --- என்று குருக்ஷேத்திரத்தைத் தேர்ந்தெடுத்தனர் (6)
12. கடவுளின் திருவடி, காகிதம் இரண்டையும் உணர்த்தும் சொல் (2)
13. பொள்ளாச்சி மலைப்பாதையில் உள்ள ---- அம்மன் கோயில் (3)
15. வேள்வி (3)
17. விநாயகரை பெண்பாலில் குறிப்பிடும் போது எப்படி அழைப்பர் (4)
19. திருவனந்தபுரத்தில் காணப்படுகிறார் அனந்த பத்ம--- சுவாமி (2)
20. தூப ஆராதனை, --- ஆராதனை, கற்பூர ஆரத்தி என்பது வரிசைக்கிரமமானது (2)

Comments