குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று டிசம்பர் 31, 2021 | Friday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Dec 31, 2021 | Dinamalar
இடமிருந்து வலம்
1. வீட்டின் முன்புறத்தில் சாய்வாக நீட்டப்பட்டிருக்கும் பகுதி.
2. கடைத் --- எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதையாக.
4. நம்மை எல்லாம் ---ப்பதால் தான் அவன் ரட்சகனோ?
5. பிரதோஷ வழிபாட்டில் இது தான் பிரதானம்.
16. இறைச்சிக் கடை - வேறொரு சொல்.
18. பறவையை கண்டானாம் இது படைத்தானாம்.
20. ஆங்கிலேயர் ஆட்சியின் போது கொடுக்கப்பட்ட பட்டம் ஒன்று.
21. பள்ளியில் படிப்பது.
வலமிருந்து இடம்
6. மேகாலயா மாநிலத்தின் தலைநகரம்.
7. --- அம்பலத் தலம் ஒன்றிருக்குதாம்.
9. அரபு நாடு ஒன்று.
13. ஒரு விஷயத்தை ரசிக்கும் தன்மை.
15. மேடு - பள்ளம் இல்லாமல் ஒரே சீராக இருக்கும் பரப்பு.
24. வியாபாரத்திற்கான மூலதனத்தில், குறிப்பிட்ட தொகையை தன் பங்காக செலுத்துபவர்.
மேலிருந்து கீழ்
1. இயற்கை கனிமப் பொருள்.
2. செஞ்சியை ஆண்ட மன்னன் --- ராஜா.
3. கண்ணுக்கு இமை ---.
5.'---யைத் தேடிய கடல்' - திரைப்படம் ஒன்று.
8. விலை உயர்ந்த கல்.
14. ஊதாரித்தனத்திற்கு எதிரானது.
15. கம்பரை ஆதரித்தவர் இந்த வள்ளல்.
19. கோவிலை சுற்றியுள்ள தெருவை --- வீதி என்பர்.
கீழிருந்து மேல்
10. வசிஷ்டர் வாயால் பிரம்ம --- பட்டம்.
11. புத்தகம் என்றும் சொல்லலாம்; துணி தைக்கவும் தேவை.
12. கல்யாண மண்டபம் என்றும் சொல்லலாம்.
16. நான்காவது ராசி ---கம்.
17. 'அழகே உன்னை --- செய்கிறேன்...' - பாடல் ஒன்று.
21. பாவம் செய்தவன்.
22. சாம்பாருக்கு பின் பரிமாறப்படுவது.
23. ரோடு போட தேவை.
Comments
Post a Comment