07/01/2022 | aanmeega malar kurukkeluthu potti | தினமலர் ஆன்மீக மலர் குறுக்கெழுத்து போட்டி


ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | ஜனவரி 07, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | Jan 07, 2022 | Dinamalar Aanmeega Malar

இடமிருந்து வலம்

1. பீமனின் ஆயுதம் (2)
3. எழுத்தறிவித்தவன் ----- ஆகும் (4)
6. கடவுளை மனமாரத் துதித்தால் தீராத வினையெல்லாம் ----- (3)
7. பஞ்சாங்கத்தில் ----- நம் உடலில் விழும் பகுதிக்கு ஏற்ப பலன் காணலாம் (3)
8. பலராமரின் கையில் காணப்படுவது (4)
9. பாவங்களைச் செய்தவன் (2)
11. புனிதம் வாய்ந்தது ------- மந்திரம் (4)
12. காஞ்சி பெரியவரின் ---- நட்சத்திரம் (3)
14.'------ தேவராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில்' என்பது கந்த சஷ்டி கவசத்தில் இடம்பெறும் வரி (3)
16. அனுமனுக்கு அவர் பலத்தை நினைவூட்டியவர் --- பவான் (2)
17. கணபதியின் மற்றொரு பெயர் (5)
19. சுப காரியங்களைச் செய்ய இந்த திசையை பார்த்து அமர்ந்து கொள்ள வேண்டும் (4)
20. இந்த அண்டை நாட்டின் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு ஹிந்து மதத்தினர் (4)
21. ஸ்ரீவில்லி., ஆண்டாளுக்கு மூலிகைகள் அடங்கிய இதை பயன்படுத்தி எண்ணெய் காப்பு உற்ஸவம் நடத்துவர் (3)

மேலிருந்து கீழ்

2. பிரபல வைத்தீஸ்வரன் கோயிலில் அருள்புரியும் அம்மன் (6)
3. சிவபெருமானுக்கு பூஜை செய்ய வில்வ --- ஏற்றது (2)
4. திருவொற்றியூரில் ஆதிபுரீஸ்வரர் கோயிலில் காளியின் வடிவாக ----- அம்மன் அருள் புரிகிறார் (6)
5. வள்ளலார் எழுதிய நூல் (4)
8. கோவையிலுள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோயிலை எழுப்பியது இந்தப் பிரபல சோழ மன்னன் (4,3)
10. சகோதரனின் செயலை வெறுத்து ராமபிரான் தரப்புக்கு மாறியவன் (5)
13. இந்த மணமிகு மலரினாலும் அர்ச்சனை செய்யப்படுவதுண்டு (4)
15. 'வேலுண்டு ----- நீக்க மயிலுண்டு எனைக் காக்க' எனத் தொடங்குகிறது பிரபல டி.எம்.எஸ். பாடல் (2)
17. யாகத்தில் வளர்க்கும் அக்னியில் இடப்படும் பொருள் (3)
18. ------த் தரு பத்தித் திருநகை அத்திக்கிறை' என்பது திருப்புகழ் பாடல் (3)
19. கருப்பசாமிக்கு ------ வெட்டி விருந்து படைப்பதுண்டு (2)

Comments