ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | ஜனவரி 14, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | Jan 14, 2022 | Dinamalar Aanmeega Malar
இடமிருந்து வலம்
1. ராமேஸ்வரத்தில் அருள்புரியும் அம்மன் (9)
6. வாழைப்பழத்தின் மற்றொரு பெயர் (3)
7. 'தந்தை ---- காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்' (3)
9. சரஸ்வதியின் மறுபெயர் (4)
11. பொள்ளாச்சி அருகிலுள்ள இந்த சுற்றுலா தலத்தில் வேதாத்ரி மகரிஷியின் அறிவுத் திருக்கோயில் உள்ளது (4)
12. கர்நாடக இசையில் ஆதி, ரூபக, திரிபுடை ஆகியவை இதன் வகைகள் (3)
16. துலுக்க நாச்சியார் என்னும் பெண் யார் மீது காதல் கொண்டார் (7)
17. உற்ஸவர் உலோகத்தாலும், மூலவர் இதனாலும் செய்யப்பட்டிருக்கும் (2)
18. சகுனியோடு ---டம் ஆடி தர்மர் அனைத்தையும் இழந்தார் (3)
21. வைணவக் கோயில்களில் அர்ச்சகர்கள் நம் தலையில் இதை வைத்து எடுப்பார்கள் (3)
22.'------ கருணைவேல் காக்க' என்கிறது கந்த சஷ்டி கவசத்தில் உள்ள ஒரு வரி (7)
மேலிருந்து கீழ்
1. உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள இந்த புனித தலம் திவ்ய தேசங்களில் ஒன்று (5)
2. 'வானாகி மண்ணாகி ----- யாகி ஒளியாகி' என பாடுகிறார் மணிவாசகர் (2)
3. காஞ்சியில் அருள்பவர் ----ராஜர் (3)
4. திருமாலின் ஆயுதமான சக்கரத்தின் அம்சமாகப் பிறந்தவர் - ஆழ்வார் (6)
5. பாண்டவர், கவுரவர் ----யுடன் இருந்திருந்தால் போர் நடந்திருக்காது (4)
6. இவர் வைகை ஆற்றில் இறங்குவது பெரும் விழா (6)
8. முன்னோர் வழிபாடு மற்றும் சிரார்த்தம் செய்ய உகந்த வட இந்தியத் தலம் (2)
10. புராணக் கதைகளை இசை, உரைநடை - கலந்து நிகழ்த்தும் நிகழ்ச்சியை ----- காலட்சேபம் என்பார்கள் (2)
13. குறும்புகள் செய்த கண்ணனை இதில் கட்டி வைத்தாள் யசோதை (3)
14. ரிக் அல்லது யஜுர் (3)
15. கண்ணிழந்த கணவனுக்காக தன் பார்வையை மறைத்துக்கொண்டவள் (4)
16. கவுதம முனிவரின் மனைவி (4)
18. சீதை அடையாளமாக தனது ----மணியை அனுமனுக்குக் கொடுத்தாள் (2)
19. மீனாட்சி அம்மனின் தோளில் அமர்ந்திருப்பது (2)
20. கண்ணப்பர் ஈசனுக்கு அளித்தது (2)
21. ஜடாயுவின் சகோதரன். --பாதி (2)
Comments
Post a Comment