21/01/2022 | aanmeega malar kurukkeluthu potti | தினமலர் ஆன்மீக மலர் குறுக்கெழுத்து போட்டி


ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | ஜனவரி 21, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | Jan 21, 2022 | Dinamalar Aanmeega Malar

இடமிருந்து வலம்

1. விநாயகரை ___வாகனர் என்பர் (3)
3. பாண்டவர்களின் மனைவி (4)
6. முருகனருளால் ---- யாக இருந்த குமரகுருபரர் பேசும் சக்தி பெற்றார் (2)
7. திருவண்ணாமலையில் இது பிரபலம் (5)
8. நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்களின் பக்தி பாடல்களால் செழித்த மொழி (3)
9. நீதிக்குப் பெயர் பெற்றவர் -- நீதிச் சோழன் (2)
10. 'விநாயகனே --- தீர்ப்பவனே ' (2)
11. 'பத்துத்தலை தத்தக் ---- தொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு' என்பது திருப்புகழில் இடம் பெறும் வரி (2)
12. தமிழகத்தில் உள்ள ஒரு ஆறு - கங்கையின் பிறப்பிடத்தை இப்படி குறிப்பர் (3)
14. முருகனின் மனைவி தேவ --- (2)
16. ----- நிலத்தின் கடவுள் கொற்றவை (2)
18. வெங்கடேச சுப்ரபாதம் பாடிய பாடகியின் இனிஷியல்கள் (2,2)
20. சிருங்கேரி சாரதாம்பாள் கோயில் இந்த நதியின் கரையில் அமைந்துள்ளது (6)
21. பிறப்பு முதல் இறப்பு வரை - 'கை' (3)
22. காஞ்சிபுரத்தில் உள்ளது பிரபல --சநாதர் கோயில் (2)
23. தமிழ் இலக்கண நுால் ---காப்பியம் (2)
24. திருநாவுக்கரசரின் பெரும் பக்தர் அப் --- அடிகள் (2)

மேலிருந்து கீழ்

1. 'புல்லாங்குழல் கொடுத்த ------' என தொடங்கும் கிருஷ்ணர் பாடல் (6)
2. ஆணவத்தை --- என்றும் கூறுவர் (4)
3. இடது --- துாக்கி ஆடுகிறார் நடராஜர் (3)
4. பீஷ்மரின் தந்தை (4)
5. ஈசன், ---- ஆகிய இருவருமே இணைந்த உருவம்தான் அர்த்தநாரி (2)
6. '---- உருத்து வந்துாட்டும்' என்பர் (4)
9. திருவண்ணாமலையின் தலவிருட்சம் --ழமரம் (2)
13. ஒருவரை பாராட்டிக் கூறும் புகழ்ச்சி வார்த்தைகளை இப்படி குறிப்பிடுவர் (5)
14. திரவுபதியின் --- கண்ணன் அருளால் வளர்ந்து கொண்டே வந்தது (2)
15. இதை பிள்ளையாரின் முகத்தில் மட்டும் காணலாம் (5)
16. திருமாலின் இருப்பிடம் ____ (5)
17. விஸ்வகர்மாவால் எழுப்பப்பட்ட இந்திரனின் நகரம் (5)
19. சித்திரைக்கும் விசாகத்துக்கும் நடுவே உள்ள நட்சத்திரம் (3)

Comments