30/01/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜனவரி 30, 2022 | Sunday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Jan 30, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. 'திருமதி ஒரு ----' - விசு இயக்கத்தில் வெளிவந்த ஒரு திரைப்படம்.
3. “ஹேண்ட்கர்சீப்" - தமிழில்.
5. சிறுதானிய வகை ஒன்று - சோ-----.
6. இது கொடுத்த மாட்டை பல்லை பிடித்து பார்க்கலாமா! - கலைந்துள்ளது.
11. உற்பத்தி அதிகமானால் விலையில் ---வு ஏற்படும்.
12. கள்ளன் - பெண்பால்.
14. முட்டாள்தனம் அதிகமாக உள்ளவனை ---- கட்டின முட்டாள் என்பர்.
16. தொல்லை.
17. பிள்ளைகளை இளம் வயதிலிருந்தே ----ப்புடன் வளர்த்தால் தான் நல்ல பண்புள்ளவர்களாக இருப்பர்.
18. எம்.ஜி.ஆரை அண்ணாவின் இது என்பர்; எம்.ஜி.ஆர்., நடித்திருந்த திரைப்படமும் கூட.

வலமிருந்து இடம்

4. உடலில் அடிபட்டதால் மறையாமல் இருக்கும் அடையாளம்.
7. சாதகம் - எதிர்ச்சொல்.
10. மொபைல் போனில் பேச வேண்டும் என்றால், இந்த கார்டு போட்டிருக்க வேண்டும்.
13. ----- நரி சலசலப்புக்கு அஞ்சாதாம்.
15. ராமாயண வில்லி இவர்.

மேலிருந்து கீழ்

1. இது வரும் முன் அணை போடணும்.
2. மலைக்கு எதிரானது.
3. அலுவலகத்தில் ---- செய்ததால் அவன் சிறையில் அடைக்கப்பட்டான்.
8. ---லன் கட்டி வைத்தான் கல்லணை.
11. இது ஒரு இருட்டறை என்று கூறியவர் அண்ணாதுரை.
12. பளு.
16. அடுத்த 24 மணி நேரத்தில் --- மின்னலுடன் மழை பெய்யும் - வானிலை அறிக்கை.

கீழிருந்து மேல்

7. சிவபெருமானின் மனைவி.
9. திருப்பூர் என்றால் இது தான்.
10. சிறுமுயலிடம் அதன் தந்திரத்தால் ஏமாந்த விலங்கு; இது காட்டுக்கும் ராஜா.
13. இரண்டு மலைகள் இணையும் இடத்தின் தாழ்வான பகுதி.
15. காரியத்தை சாதித்துக் கொள்ள உடலை நெளித்துக் கொண்டு போடும் கும்பிடு ---- கும்பிடு.
17. 'பந்த்' அன்று இது ஏற்படக் கூடும் என எதிர்பார்த்து போலீசார் உஷாராக இருந்தனர்.
18. மார்கழி மாதத்தில் சபாக்களில் ----க் கச்சேரிகள் நடக்கும்.
19. வயல் என்பதன் வேறொரு அழகான சொல்.

Comments