Sahothayam Crossword Competition #11 Direct URL:
Sahothayam Crossword Competition #11 Short URL:
சகோதயம் - சிறப்பு குறுக்கெழுத்துப் போட்டி (29 ஜனவரி 2022)
இடமிருந்து வலம்
1. இருவழியொக்கும் சொல் அல்லது இப்படியும் குறிப்பிடலாம்.
5. சிவாஜி கணேசன், எஸ். வி. ரங்கராவ் நடிப்பில் உருவான அற்புதமான திரைக்காவியம் - படிக்காத ----.
7. '--- மகமாயி.. ஆயிரம் கண்ணுடையாள்...' - ஆதி பராசக்தி திரைப்பட பாடல்.
8. அரசன்.
13. விலங்குகளின் மூலம் விதை பரவலை ஊக்குவிக்க 'பிசாசின் நகம்' போன்ற பழத்தின் அமைப்பினை கொண்ட ஆலை - 'மார்டினியா அன்வா'. இத்தாவரத்தினை எளிதில் நினைவில் கொள்ள பயன்படுத்தப்படும் மோனை நயம்படும் வாக்கியம் - "மார்டினியா -----க்கிட்டியா?"
20. ----ய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்..! ' என்று பாடியவர் வள்ளலார்.
21. இந்தியக் குடியரசுத் தலைவர், ----நாத் கோவிந்த்.
22. 'ஆர்க்கிமிடீஸ்' என்றதும் நினைவில் தோன்றும் அடுக்குத் தொடர்.
வலமிருந்து இடம்
4. 'சிசிபஸ் ஜுஜுபா' என்னும் தாவரவியல் பெயர் கொண்ட பழம்.
6. --த்தெரியாதவள் தெரு கோணல் என்றாளாம்.
11. வதூ - புது மணப்----.
12. உதவித் தொகை. ---யம்.
14. மலை அல்லது கோபுரம்.
15. தன் குழந்தைகளுக்கு ஆசை ஆசையாய் --சுட மொறு மொறுவென தோசைக் வார்த்துக் கொடுத்தாள் தாய்.
16. நீர் வேட்கை.
19. மயிர்நீப்பின் வாழாக் ------ அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.
24. நீக்கு.
மேலிருந்து கீழ்
1. நீண்ட தூரம் ஒலிபரப்பப்படும் வானொலியின் தந்தை.
2. மனிதன்.
3. அவள் ---- என ஆடினாள். இரட்டைக்கிளவி பதம்.
4. இதன் மூலம் இல்லத்தரசிகளிடம் சிநேகமான இயக்குனர் பாலச்சந்தர். பிரபலமான சின்னத்திரை தொடர்.
5. ஒரு புவியியற் தகவற் தொழில் நுட்ப மென்பொருள். கூகுள் ----ஸ்.
9. அம்மாவின் உடன் பிறந்த சகோதரர்.
10. 'குறுகிய பார்வையையும் தூரப் பார்வையையும் சரிசெய்ய குழி லென்ஸ் மற்றும் குவி லென்ஸ் முறையே பயன்படுத்தப்படுகிறது' என்பதனை நினைவில் கொள்ள அக்கால ஆசிரியர்கள் பயன்படுத்தும் வாக்கியம். - "கிட்டக் குழிவெட்டி -----குவி".
11. தயமின் என்னும் உயிர்ச்சத்து பி1 உணவில் குறைவாக எடுக்கப்படுவதால் ஏற்படும் நோய்.
17. சின்னக் கலைவாணர் விவேக்கின் நடிப்பில் தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி தொடர் இது. மேல் --- காலி.
18. விஷ்ணுவின் மூன்றாம் அவதாரம், ----- அவதாரம்.
20. பாகிஸ்தானையும் இந்தியாவையும் இணைக்கும் எல்லைப் பகுதி.
கீழிருந்து மேல்
15. சுடிதார், சுருக்கமாக.
23. பஞ்சு-பட்டு-பீதாம்பரம் சீரியல் பிரபலம் இவர். ------- ராமமூர்த்தி.
22. துவாபர ---- கலியுகத்திலும் இரண்டு மடங்கு கால அளவு கொண்டது.
Comments
Post a Comment