01/03/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மார்ச் 01, 2022 | Tuesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Mar 01, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. தென்காசியில் விவசாய நிலம் ஒன்றில், சமீபத்தில் கண்டெடுத்த 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு இந்த மன்னர்கள் காலத்துடையதாம்.
2. '----மா நானும் கூட வர சம்மதமா...' - ஒரு பாடல் - கலைந்துள்ளது.
4. பெரியவர்களை ----த்து நடக்க வேண்டும்.
5. சபதம்.
6. பெண் சிசு கொலை கொடுமை பற்றி பாரதிராஜா எடுத்த படம்.
13. தனக்கு மரியாதை கொடுப்பதில்லை , கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பதில்லை என்று கூறி மேற்கு ---- மாநில சட்டசபையை முடக்கி வைக்க, அதன் கவர்னர் உத்தரவிட்டார்.
17. சென்னையில் சிறைச்சாலை உள்ள இடம் ----ல்.

வலமிருந்து இடம்

8. திருநெல்வேலி - சுருக்கமாக.
10. உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்தால், அதற்கு உரிய விலை கொடுக்க நேரிடும் என, இந்த நாட்டு அதிபரை தொலைபேசி வாயிலாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்தார்.
12. சந்நியாசிக்கு எதிரானவர் ----ரி.
15. உடன்படிக்கை.
16. ----- என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
19. அவனுடைய அன்புத் ----லையை என்னால் பொறுக்க முடியவில்லை.
20. அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா, விண்வெளியில் நிலை நிறுத்தியுள்ள 'ஜேம்ஸ் வெப்' என்ற தொலைநோக்கி, வானில் நிறைய அளவில் தோன்றும் இதன் ஒளியின் முதல் படத்தை அனுப்பியுள்ளது.

மேலிருந்து கீழ்

1. வந்த ----யை திரும்பி பார்.
3. சீனாவை சேர்ந்த ஜாங் கீ என்ற பெண், தமிழகத்தின் இந்த மாவட்டத்தில் தான் பயணம் செய்தது குறித்து தமிழில் புத்தகம் வெளியிட்டுள்ளார்.
6. ----லிலே கலை வண்ணம் கண்டான்.
9. பிச்சை - வேறொரு சொல்.
11. மஹாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில், சமீபத்தில் இந்த சீசனில் முதற் கட்டத்தில் விளைந்த இந்த பழம் 31,000 ரூபாய்க்கு ஏலம் போனது.
13. சிப்ஸ் - தமிழில்.
14. சிறுதானியம் ஒன்று.
18. ----திரம் அவன் கண்ணை மறைத்தது.

கீழிருந்து மேல்

5. கற்பூரம் என்றும் சொல்லலாம்.
7. பாண்டவர்களில் மூத்தவர்.
8. நிதி ----யால் நிறுவனம் தவித்தது.
15. சந்திரபிலா நிலக்கரி சுரங்கம் இந்தியாவின் ---- மாநிலத்தில் உள்ளது.
20. சிகரத்தை நோக்கி வெற்றி -----.

Comments