04/02/2022 | aanmeega malar kurukkeluthu potti | தினமலர் ஆன்மீக மலர் குறுக்கெழுத்து போட்டி


ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | பிப்ரவரி 04, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | Feb 04, 2022 | Dinamalar Aanmeega Malar

இடமிருந்து வலம்

1. கடவுளுக்கு தரப்பட்ட நைவேத்தியம் (5)
3. மேஷத்தில் இருந்து மீனம் வரை (4)
6.---கொடுத்த சுடர்கொடி ஆண்டாள் (3)
7. பாம்பன் சுவாமிகள் அருளியது ---கவசம் (4)
10. திங்கட் ------ சிவனுக்கு உகந்தது (3)
11. சபரிமலையில் மகர--- காண்பது விசேஷம் (2)
12. கோகுலத்தில் வசித்த நந்தகோபரின் மனைவி. (3)
13. தத்துவப் பாடல்கள் எழுதுவதில் கண்ணதாசனுக்கு ----- அவர்தான் (3)
15. இறக்கும் தருவாயிலும் தன்னிடம் -- கேட்டு வந்த அந்தணருக்கு உதவினான் கர்ணன் (4)
17.மலர்--- ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார் (2)
20. ராமரிடம் நட்பு பூண்ட வானர மன்னன், ராமனுக்காக உயிரை நீத்த கழுகு (5,3)
23. 'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறு ஒன்று அறியேன் ------!' என்றார் தாயுமானவர் (5)
24. படை வீடுகளில் ஒன்று திருப்பரங் ------ (4)

மேலிருந்து கீழ்

1. 'பித்தா---- பெருமானே அருளாளா' (4)
2. அர்த்த சாஸ்திரத்தை எழுதியவர் (6)
4. ----- முகமும் மனித உடலும் கொண்டவர் நரசிம்மர் (3)
5. கலாசாரம் என்பதை ---பாடு என்றும் கூறலாம் (2)
7. நளன், பீமன் ஆகியோர் இந்தக் கலையில் கைதேர்ந்தவர்கள் (4)
8. அர்த்தமுள்ள இந்துமதம் எழுதியவரின் இயற்பெயர் (4)
9. கிரகங்களின் நிலையை அடிப்படையாகக் கொண்ட கலை (4)
13.மைசூர் ஸ்ரீரங்கப்பட்டினம் அருகே உள்ளது -----ம்பாள் கோயில் (3)
14. சவுக்கு என்றும் பொருள் கொண்ட சொல் (2)
16.மகாபாரதப் போரின் போக்கை திருதராஷ்டிரனுக்கு வர்ணித்தவன் (6)
18. ----- திசை வந்தாலே செல்வங்கள் கொழிக்கும் (4)
19. இது புரிந்தால் வரம் கிடைக்கும் (3)
21. இப்போது நடப்பது கலி ---- (3)
22. வாலியின் மனைவி (2)

Comments