18/02/2022 | aanmeega malar kurukkeluthu potti | தினமலர் ஆன்மீக மலர் குறுக்கெழுத்து போட்டி


ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | பிப்ரவரி 18, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | Feb 18, 2022 | Dinamalar Aanmeega Malar

இடமிருந்து வலம்

1. சிவன் திருவிளையாடல் புரிந்த தலம் (3)
3. தென் இந்தியாவின் கங்கை (4,2)
7. பீமனால் கொல்லப்பட்ட அரக்கன் (5)
9. கரூர் மாவட்டம் குளித்---- நகரில் உள்ளது கடம்பனேஸ்வரர் கோயில் (2)
10. கண்ணன் கோபியருடன் ---- புரிந்தார் (4)
11. திருமகளின் வாகனம் (3)
12. புவிஈர்ப்பு ----யால் பொருள்கள் ஈர்க்கப்படுகிறது (2)
13. 'ஓங்கி உலகளந்த ----- பேர்பாடி' எனத் தொடங்குகிறது ஒரு பாசுரம் (5)
15. திருமறைக்காடு கோயில் கதவு திறக்க '------ணிநேர் மொழியாள்' என்னும் பதிகத்தை அப்பர் பாடினார் (2)
17. தங்கள் ------ காரணமாக முனிவர்கள் இட்ட சாபங்கள் பலித்தன (5)
19. சீதையைத் தவிர வேறு பெண்ணை நினைக்காத ராமபிரான் ஆண்களுக்கு ஒரு -----யாகத் திகழ்கிறார் (5)
21.'------கேடு நினைப்பான்' என்பது பழமொழி (4)
22. மதியூகமாக செயல்பட்டு பாண்டவர்களை வெற்றிபெறச் செய்ததால் கண்ணனை கபட--- என்பர் (2)

மேலிருந்து கீழ்

2. கிருஷ்ணா நதியுடன் இறுதியில் கலக்கும் நதியின் சுருக்கமான பெயர் (3)
4. ரிஷி என்றாலே ஜடாமுடியும் -----யும் கொண்ட முகம் மனதில் எழும் (2)
5. துன்பமுற்றோருக்கு கடவுளின் பெயர் ----- அளிக்கும் (4)
6. '------ மறைத்தது மாமத யானை' என்கிறது திருமந்திரம் (4)
7. 'என் கடன் ---- செய்து கிடப்பதே' என்றார் திருநாவுக்கரசர் (2)
8. ராம, லட்சுமணர் ----- மைந்தர்கள் (4)
11. அழிவுக்குக் காரணம் இது என்றார் புத்தர் (2)
12. சங்கரர், மண்டனமிஸ்ரருக்கும் இடையே ----- நடந்தது. (4)
13. --- பேசியவர் அரிச்சந்திரன் (3)
14. ஐயப்பன் கோயிலுக்கருகே உள்ளது ------ அம்மனின் கோயில் (5)
15. சன்மார்க்கத்தில் உயிர்ப் -- கூடாது (2)
16. குடகு மாநிலத்தில் தோன்றி தமிழகத்தில் பாயும் நதி (3)
18.'---- வடிவெடுத்து சுக்கிராச்சாரியார் தானத்தை தடுக்க முயன்றார் (3)
20. விளக்கெரிய எண்ணெய்யோடு இதுவும் வேண்டும் (2)

Comments