19/02/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று பிப்ரவரி 19, 2022 | Saturday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Feb 19, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. ராமாயணத்தில் ராமர், மகாபாரதத்தில் பாண்டவர் சென்றது.
3. நம் உடலுக்கு ஓய்வு கொடுப்பது.
8. நாம் சுயசார்புடைய நாடாக மாறிவிட்டதற்காக ---- கொள்வோம்.
10. 'VAT' - வாட் என்பதன் தமிழ் விரிவாக்கம்; --- கூட்டு வரி.
12. கணவன் என்றும் சொல்லலாம்.
17. சமுதாயம்.
18. தேர் முட்டி என்றும் சொல்லலாம்.
21. இந்தியாவின் மேற்கு --- மும்பை.

வலமிருந்து இடம்

4. குதிரை போன்ற விலங்குகளின் மேல் சவாரி செய்ய, அவற்றின் முதுகின் மேல் போட்டு இருக்கும் தோலால் ஆன இருக்கை.
11. சாப்பாடு உப்பு ---பில்லாமல் இருந்தது.
13. அழகு நிலையம் ஆங்கிலத்தில் பியூட்டி-----
14. ஐ.ஓ.சி., நிறுவனம் அமைந்துள்ள சென்னையிலுள்ள புறநகர் பகுதி.
20. பசி --- அறியாதாம்.
23. தோட்டத்தில், வயலில் இது கட்டி நீர் பாய்ச்சுவர்.

மேலிருந்து கீழ்

1. '---மாதரம்' என்போம்.
2. செல்வம் வேறொரு சொல் --- பத்து.
7. சீமை ---மரங்களால் நிலத்தடி நீர் பாதிப்பு.
9. நான் செய்வது சரியா, --- என்று தெரியவில்லை .
15. தங்கத் ---- விருந்தளித்தனர்.
17. மலையாளத் திரையுலகில் பிரபலமாக இருந்த இயக்குனர் ஒருவர் ஐ.வி.---.
18. தேனிசைத் தென்றல் என அழைக்கப்பட்ட இசையமைப்பாளர்.
19. நீண்ட தூர பயணம் செய்ய விரும்புபவர்கள் ---லில் செல்ல விரும்புவர்.

கீழிருந்து மேல்

5. பூட்டு - ஆங்கிலத்தில்.
6. வெட்கப்படுதல்.
11. எம்மதமும் ----.
14. தேர்வில் இது வாங்குவதை பொறுத்து தான் தேர்ச்சி, வெற்றி நிர்ணயிக்கப்படும்.
16. விநாயகரின் இன்னொரு பெயர்.
21. பாம்பு கடித்தவர் வாயில் இது தள்ளியது.
22. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று கூறியவர்.
23. புண்ணியம் - எதிர்ச்சொல்.

Comments