25/02/2022 | aanmeega malar kurukkeluthu potti | தினமலர் ஆன்மீக மலர் குறுக்கெழுத்து போட்டி


ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | பிப்ரவரி 25, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | Feb 25, 2022 | Dinamalar Aanmeega Malar

இடமிருந்து வலம்

2. '----- நின்றாய் காளி' என்று பாடினார் பாரதியார் (4)
4. கருப்பு எள் இவருக்கு உகந்தது (2)
5. விக்கிரக -------- என்றால் உருவ வழிபாடு என்று பொருள் (4)
6. எருது, சிங்கம், புலி, நாய் போன்ற ---- கடவுளரின் வாகனங்கள் (6)
7. கைகேயியின் இரு வரங்களைக் கேட்ட தசரதர் ------- அடைந்தார் (4)
8. 'கலி____ வரதன் கண்கண்ட தெய்வமாய்' என்கிறது ஒரு பாடல் (2)
9. மறுமை என்பது அடுத்த பிறவி. ------ என்பது இப்பிறவி (3)
11. ----- கருப்பு பிடித்து விட்டது என்றால் திருஷ்டி கழிப்பார்கள் (3)
12. மேல்மருவத்துாரில் அருள்புரிகிறாள் ------ பராசக்தி (2)
13. ஊழ்வினை (2)
16.------கபடு இல்லாதவர்களை கடவுள் அதிகம் விரும்புவான் (4)
17. திருமாலின் --- தரி பார்வதி தேவி (2)
20. கார்த்திகை மைந்தா கடம்பா _____ இடும்பனை அழித்த இனியவேல் முருகா என்கிறது கந்த சஷ்டி கவசத்தின் ஒரு வரி (5)
21. சோதனைகள் நேர்ந்தாலும் பக்தர்களை கடவுள் கைவிட்டதாக இல்லை (4)

மேலிருந்து கீழ்

1. திருப்பதியில் ஏழுமலையான் கோயிலுக்கு அருகில் உள்ளது _____ கோயில் (3,4)
2. கணபதியை ___ முகன் என்பதுண்டு (2)
3. சேனை, வள்ளி என்பன ---- மட்டுமல்ல, முருகனின் மனைவியர் (4)
4. பிரயாக்ராஜில் உள்ளது திரிவேணி ___ (5)
6. ' ------ பந்தினைப் போல் உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்' என்பது பாரதியின் பாடல் வரி (4)
9. ராமாயணம், மகாபாரதம் போன்றவை இந்த வகையைச் சேர்ந்தவை (5)
10. சீதையின் மறுபெயர் (3)
11. சாமியார்களின் உடை பொதுவாக இந்த நிறத்தில் இருக்கும் (2)
14. சனீஸ்வரருக்குப் புகழ் பெற்ற தலம் திரு ------ (4)
15. ஈசன் சங்கரன் என்றால் ஈஸ்வரி? (4)
18. இந்த குணத்துக்குப் பெயர் பெற்றவர் துர்வாச முனிவர் (3)
19. திருச்செந்துாரில் முருகர் ---பத்மனை வென்றார் (2)

Comments