குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மார்ச் 05, 2022 | Saturday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Mar 05, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. கோவைக்கு அருகில் உள்ள முருகன் தலம்.
2. கார்த்திகை தீபத்தன்று ஏற்றப்படும் மண் விளக்கு.
3. இது இருக்கும்போது யாராவது காயை விரும்புவரா?
11. உன் ---- என்கிட்டே பலிக்காது; பகட்டான பேச்சு, நடவடிக்கை.
13. போலீஸ் அதிகாரியாக எம்.ஜி.ஆர்., நடித்திருந்த திரைப்படம்.
16. நுாலகம் என்றும் சொல்லலாம்.
17. இறந்தோரைக் குறிப்பிடுகையில், என்றும் நினைவில் நிற்பவர் என்ற பொருள்படி கூறப்படும் சொல்.
வலமிருந்து இடம்
4. நாட்டில் ஏமாற்றுத்தனம் ----; கட்டுப்படுத்த முடியவில்லை.
5. கோடைக் காலத்திற்கேற்ப பனை மரம் தரும் குளிர்ச்சியான பொருள் ஒன்று.
8.' ---- நீ வாராய்...' ஒரு பாடலின் ஆரம்ப வரி.
10. வண்டி ஓட்ட ----- உரிமம் அவசியம்.
15. பாக்கி.
மேலிருந்து கீழ்
1. உழவனின் நண்பன் என்றழைக்கப்படும் ஒரு உயிரினம்.
2. ஒன்றில் பாதி.
7. தொழிலாளர்களுக்கு ---- சலுகைகள் அறிவிப்பு.
9. ஓங்கார நாதம்.
12. பசித்தவனுக்கு ---- பிடிக்க கற்று தருவது தான் நல்லது.
15. திருமால் பெருமைக்கு ---- ஏது.
கீழிருந்து மேல்
5. எந்த தகவலையும் அவன் விரல் ----யில் வைத்திருப்பான்.
6. உழவர் திருநாளாகவும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
10. 'அலைகள் ----' - கார்த்திக் நடிகராக அறிமுகமான திரைப்படம்.
11. பட்டாளத்துக்காரன்.
14. ---- போன்றவர்கள் பெண்கள்; இப்போதுள்ள பெண்கள் பற்றி நகைக் கடை ஒன்றின் மதிப்பீடு.
16. ஓட்டுப் போட ----- அடையாள அட்டை தேவை.
17. அடிக்கிற கை தான் -----க்குமாம்.
Comments
Post a Comment