06/03/2022 | varamalar kurukezhuthu potti | தினமலர் வாரமலர் குறுக்கெழுத்து போட்டி


தினமலர் - வாரமலர் - மார்ச் 06, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.

இடமிருந்து வலம்:

1. பீச் - தமிழில்.
8. மணற்பாங்கான பகுதி; ---வனம்.
9.இறந்தவர்களை எரிக்கும் இடம்.
12.------க் கவிஞர் என்று புகழ்பெற்றவர் கவிஞர் வாலி.
13. ஆசிரியர் - வேறொரு சொல்.
15.அரசவைக் கவிஞராக இருந்த திரைப்படப் பாடலாசிரியர்; ----ப்பித்தன்.

வலமிருந்து இடம்:

3.சாரணிய இயக்கத்தைச் சேர்ந்த சிறுவரை குறிக்கும் சொல்.
7.நிரந்தரம் அல்லது நிலையானது - வேறு சொல்.
11. '------- விண்டிலர்; விண்டவர் கண்டிலர்' - பழமொழி.
18. பாரதியாரின் பட்டப் பெயர்களுள் ஒன்று.

மேலிருந்து கீழ்:

1.கண்ணதாசனின் பட்டப் பெயர்.
2.கருவூலம் என்றும் சொல்லலாம்.
3.முன்னாள் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவை குழந்தைகள் இப்படி செல்லமாக அழைத்தனர். மாமா என்று அர்த்தம் தரும் ஹிந்தி வார்த்தை.
4.நடிகர் ஜெமினி கணேசனை என்று கிண்டலாக அழைப்பர்; உணவு வகை ஒன்றும் கூட.
5.தலைமை பொறுப்பில் இருப்பவர்.
10.ஒன்றுமில்லை என்பதை குறிக்கும் சொல்.
11. ----- அன்பை முறிக்கும்.
13.----க் கவிஞர் என்றழைக்கப்பட்டவர் கவிஞர் சுரதா. 

கீழிருந்து மேல்:

6.நிறம் - வேறு சொல்; கடைசி எழுத்து இல்லை.
12.மீன் காய்ந்தால் கரு----.
14. 'ஒழுங்காய் ------ வயற்காட்டில்; உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்...' ஒரு பாடல் வரி.
15. ----க் கவி என்று புகழ் பெற்றவர் பாரதிதாசன்.
16.------க்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆகணும்.
17.பயத்தில் அவன் உடல் ----த்தது.

Comments