தினமலர் - வாரமலர் - மார்ச் 20, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.
இடமிருந்து வலம்:
1.சரித்திர நாவல்கள் எழுதி புகழ்பெற்றவர்; 'கடல்புறா' இவர் எழுதிய நாவல்களில் குறிப்பிடத்தக்கது.
2.குடும்பக் கதைகள் எழுதி புகழ்பெற்ற பெண் எழுத்தாளர்.
3.சரித்திர கதைகளில் வரும் கதாபாத்திரங்களை அந்த சிற்பி, சிலையாக --த்தார்.
6.பஞ்சதந்திர கதைகள் எழுதியவர்.
10.அப்துல்கலாம் எழுதிய நூல்களுள் ஒன்று, --- சிறகுகள்!'
11.எம்.ஜி.ஆரின் சுயசரிதையாக சொல்லப்படும் நூல், 'நான் -- பிறந்தேன்!'
13. 'மெர்குரி பூக்கள்' தொடர் நாவலை எழுதியவர்.
17.இல்லம் - வேறு சொல்.
வலமிருந்து இடம்:
9. 'பார்த்திபன் கனவு' சரித்திர நாவலை எழுதியவர்.
12.பெருமாள் மீது பாசுரங்கள் இயற்றியவர், இவரை ஆண்டாள் என்றும் அழைப்பர்.
16.இவர் எழுதிய, 'ப்ரியா' என்ற நாவல் திரைப்படமானது.
18.--- எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும்.
மேலிருந்து கீழ்:
1.'வாஷிங்டனில் திருமணம்' என்ற நகைச்சுவை நாவலை எழுதியவர் பெயர் சுருக்கமாக.
4.'இல்லஸ்டிரேடட் வீக்லி ' என்ற ஆங்கில பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர், --வந்த்சிங்.
5. திரைப்படமான, 'பாவை விளக்கு' நாவலை எழுதியவர்.
6.நம் நாட்டின் ----க்கு பத்திரிகைகள் பெரும் பங்காற்றின.
10.ஜெயகாந்தனின் நாவல் ஒன்று; 'கருணையினால் ---!'
14.தமிழில் கம்பராமாயணத்தை எழுதியவர்; --பர்.
கீழிருந்து மேல்:
7.மனதில் எடுத்துக் கொள்ளும் தீர்மானம், ----பம்.
8.மாணவி - எதிர்ச்சொல்.
15. வலம்புரி ஜான் ஆசிரியராக இருந்து, எம்.ஜி.ஆர்., மேற்பார்வையில் வெளி வந்த வார இதழ்.
17.பரமார்த்த குரு கதைகள் எழுதியவர்.
Comments
Post a Comment