குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மார்ச் 23, 2022 | Wednesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Mar 23, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. ம.பொ.சிவஞானம் -----ஆய்வாளர் என அறியப்படுகிறார்.
4. இதமான காற்று தரும் மின்சார சாதனம் - ஆங்கிலத்தில்.
7. கண்காட்சி திறப்பு விழாவுக்கான ---பாடு சிறப்பாக இருந்தது.
8. பயிர்களை மேய வரும் குருவிகளை விரட்ட உதவும் சாதனம்.
13. போரால் மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் ---க்குறியானது.
16. அக்னி தேவனை --- கடவுள் என்பர்.
17. அம்மானை என்பது ---- விளையாடும் விளையாட்டு.
19. பிடிவாதம் - வேறொரு சொல்.
20. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை ---த்தனர்.
22. கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி ---- போனானாம்.
வலமிருந்து இடம்
5. ஆச்சர்ய சொல் ஒன்று.
11.----- திருவினையாக்கும்.
12. மாநாட்டிற்கு ---- கடலென திரண்டு வாரீர்.
15. செயற்கை உரம்.
21. அறிமுகமாகாமல் இருக்கும் நபரை ----மி என்பர்.
25. கெட்டவன்.
மேலிருந்து கீழ்
1. கி.வா.ஜ.,வை --- அறிஞர் என்பர்.
2. பள்ளிகளில் கல்வியோடு தொழிற்----யும் வழங்க வேண்டும்.
3. சிலப்பதிகாரம் சிறந்த ---- என புகழ் பெற்றது.
6. விருந்தினர்களை ---ம் மலர வரவேற்பது நம் பண்பு.
9. இது பின்னும் பூச்சி சிலந்தி.
10. புஜம் - வேறொரு சொல்.
14. சென்னை மாநகரில் உள்ள ஒரு பகுதி ----பாக்கம்.
15. சனி பகவானுக்கு உகந்தது கறுப்பு ----.
17. திடீரென மழை -----து பூமியை குளிரச் செய்தது.
19. காஜிரங்கா தேசிய பூங்கா என்ற மிருகக்காட்சி சாலை இந்த மாநிலத்தில் உள்ளது.
கீழிருந்து மேல்
5. ---- நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.
12. விநாயகர் முருகனின் ----.
18. தொழிற்சாலையில் தீப்பிடித்து தெருவெங்கும் ----புகை சூழ்ந்தது.
21. எதிர்பாராமல் கிடைத்த பணத்தில் ---- பரமாக வாழ்ந்தான்.
23. வாரிசாக இருக்கும் ஒரே மகன்/மகள் ----க் கொழுந்து.
24. அடித்தால் ஏற்படும் உணர்வு.
25. தமிழக காவல் துறையில் சென்னை கமிஷனர் உட்பட முக்கிய பதவிகளை வகித்த உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கரன்சின்ஹா தற்போது ---- துறை இயக்குனர் பதவியில் இருக்கும்போது ஓய்வு பெற்றுள்ளார்.
Comments
Post a Comment