ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | மார்ச் 25, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | Mar 25, 2022 | Dinamalar Aanmeega Malar
இடமிருந்து வலம்
1. சூரபத்மனுக்குத் துணை நின்ற அவனது தங்கை, ராவணனுக்குத் துணை நின்ற ராமரால் வதம் செய்யப்பட்ட அரக்கி (4,3)
5. ஆற்றின் இன்னொரு பெயர் (2)
6. மணிகண்டன் வதம் செய்த அரக்கி (3)
7. --- காரியங்களைத் தவிர்த்து புண்ணிய காரியங்களில் ஈடுபட வேண்டும் (2)
8. 'நாமார்க்கும் ---- யல்லோம் நமனை அஞ்சோம்' என்றார் திருநாவுக்கரசர் (2)
9. தாயே யசோதா, புல்லாய்ப் பிறவி தர வேண்டும், அலைபாயுதே கண்ணா போன்ற பிரபல பாடல்களை இயற்றியவர். ---காடு வேங்கட சுப்ரமணிய ஐயர் (4)
10. தீர்த்தங்கரர்களை வழிபடுபவர்கள் ------கள் (4)
13. ஐயப்பனை --ஹரசுதன் என்பார்கள் (2)
14. ஒன்பது கிரகங்களில் இடம் பெறும் இரு பாம்பு அம்சங்கள் (2,2)
16. 'உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்' என்ற பாடலை பாடியவர் (4)
18.---- மாநிலத்தில் திருப்பதி, காளஹஸ்தி கோயில்கள் உள்ளன (4)
19. ராமபிரானும் அர்ஜுனனும் இதில் சிறந்தவர்கள் (5)
மேலிருந்து கீழ்
1. பாண்டவரை மாளிகையில் வைத்து எரிக்க திட்டமிட்டான் துரியோதனன் (4)
2. ---ந்தையை ஆட்சி செய்தவன் வாலி (3)
3. தன்-- தனக்குதவி என வாழ்ந்தவள் சபரி (2)
4. 'மார்கழித் திங்கள் ------- நிறைந்த நன்னாளாய்' (2)
5. ---கிரகங்களை பக்தர்கள் ஒன்பது சுற்றுகள் சுற்றுவதுண்டு (3)
7. ராமனின் இதை அரியணையில் வைத்து அரசாண்டான் பரதன் (3)
9. சிவபெருமான் காலை உயர்த்தி ஆடிய நடனத்தை ----தாண்டவம் என்பார்கள் (5)
10. நம்மாழ்வாரைப் புகழ்ந்து ---- அந்தாதி என்ற நூலை எழுதினார் கம்பர் (5)
11. கண்ணன் இருப்பிடத்தில் செல்வம் நிலவியது என்றால் குசேலர் இருப்பிடத்தில் இது நிலவியது (6)
12. பிரயாக்ராஜில் உள்ளது மூன்று நதிகளின் ------- (5)
15. மகாமக ஊரின் பெயர்ச்சுருக்கம் (4)
17. இந்த மரத்தின் கீழ் அமர்ந்திருப்பார் தட்சிணாமூர்த்தி (2)
18. கடவுளை ஏற்பது ---திகம், மறுப்பது நாத்திகம் (2)
Comments
Post a Comment