ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | ஏப்ரல் 08, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | Apr 08, 2022 | Dinamalar Aanmeega Malar
இடமிருந்து வலம்
1.நகருங்கள் என்ற பொருள் தரும் இந்த தெலுங்குச் சொல்லை திருப்பதியில் கேட்கலாம் (6)
4. 'வங்கக் கடல் கடைந்த ----' என்று தொடங்குகிறது ஒரு பாசுரம் (4)
6. மழலை வரம் தருபவள் ----லட்சுமி (4)
7.எண்ணெய்யும் திரியும் கொண்டு ஒளிவிடுவது (3)
8. இச்சா, ஞான, ---- சக்தி என மூன்று சக்திகள் உண்டு (3)
10. முனிவர்கள் மகிழ்வில் அளிப்பது வரம். கோபத்தில் கொடுப்பது? (3)
12. எண்ணெய் சிந்திவிடக் கூடாது என்பதில் ------ செலுத்திய நாரதர் திருமாலின் நாமத்தைக் கூற மறந்தார் (4)
13. ---------நாதரை பள்ளி கொண்ட பெருமாள் என்பதுண்டு (3)
15.'--- வது நீறு, வானவர் மேலது நீறு என்கிறார் திருஞானசம்பந்தர் (5)
19. நாகதோஷம் நீக்கக் கூடிய தலம் திருவாரூர் மாவட்டம் திருப்---புரம் (2)
20. செல்வம் (2)
22. விநாயகரின் ஒரு திருநாமம் (4)
23. வரம் பெற்ற அசுரர்கள், தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் புரிந்த ------- கொஞ்சநஞ்சமில்லை (5)
24. ---- வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டார் என்பர் (2)
மேலிருந்து கீழ்
1. சிவபெருமானின் ஒரு பெயர் (7)
2. யானை (3)
3. மார்கழி தொடங்குவது இந்த ஆங்கில மாதத்தில்தான் (5)
4. --, பிதா, குரு, தெய்வம் (2)
5. '----- இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக் கவலை மாற்றலரிது' (6)
9. முனிவர்கள் -- வளர்க்க, அதை அழிப்பதே அசுரர்களில் பணி ஆயிற்று (3)
11. ஹிந்து கோயில் வடிவமைப்புகள் இதன்படி அமைந்துள்ளன (4)
14. திருச்செந்துாரில் --சம்ஹாரம் நடக்கும் (2)
16. மாதம், கிழமை, சந்திரன் ஆகிய மூன்றையும் குறிக்கும் சொல் (4)
17. மாய மானாக வந்த அரக்கன் (4)
18. '--ப்போர்க்கு வல்வினைபோம்' எனத் தொடங்குவது கந்த சஷ்டி கவசம் (2)
19. இவரின் மகன்கள் என்பதால் பாண்டவர்கள் எனப்பட்டனர் (3)
21. கண்ணன் மனைவியின் அண்ணன் (3)
Comments
Post a Comment