22/04/2022 | aanmeega malar kurukkeluthu potti | தினமலர் ஆன்மீக மலர் குறுக்கெழுத்து போட்டி


ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | ஏப்ரல் 22, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | Apr 22, 2022 | Dinamalar Aanmeega Malar

இடமிருந்து வலம்

1. யோக சூத்திரங்களை எழுதிய முனிவர் (5)
4. கண்ணன் இதிலிருந்த வெண்ணெய்யைத் திருடித் தின்றான் (2)
5. 'தந்தை ----- காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்'. (3)
6. அனுமன், பீமன் ஆகியோரின் தந்தை (5)
8. ' ---- பார்வதி பதயே', 'ஹரஹர மகாதேவா' (2)
9. 'என்ன ------ செய்தனை யசோதா, எங்கும்நிறை பரப்பிரும்மம் அம்மா என்றழைக்க' (3)
11. திருவண்ணாமலையில் பிரபலம் - முக்கியமாக பவுர்ணமியில் (5)
13. சுக்ரீவனின் அண்ணன் காலிழந்து காணப்படுகிறான் (2)
15. மகாராஷ்டிரத்தில் உள்ள சாய்பாபா தலம் (3)
17. தோற்றம் இல்லாதது அருவம். தோற்றம் கொண்டது? (4)
18. 'கணபதியே ----- அருள்வாய்' எனத் தொடங்குகிறது சீர்காழி கோவிந்தராஜனின் ஒரு பிரபல பாடல் (4)
19. அனுமன் கடலை நூறு யோசனை ---- கடந்து இலங்கையை அடைந்தான் (3)
20. 'வறியார்க்கொன்று ஈவதே ----- (2)
21. பார்வதிதேவியின் மறுபெயர் (4)

மேலிருந்து கீழ்

1. சபரிமலைப் பிரதேசத்தில் பாயும் நதி - ஒரு தோல் இசைக்கருவியின் பெயரும் கூட (3)
2. ராவணனுடன் போரிட்டு மடிந்த கழுகு (3)
3. தர்மர், அர்ஜுனனுக்கும் நடுவில் பிறந்தவர் (3)
4. குறிப்பிட்ட தினங்களில் மக்கள் ஒன்று கூடிக் கொண்டாடும் கோயில் திருவிழா (5)
6. நரசிம்ம அவதாரத்துக்கு அடுத்து திருமால் எடுத்தது (3,4)
7. கண்ணனைப்பெறும் பேறு படைத்தவள் (3)
9. தெய்வத்தன்மை உள்ளதாக நம்பப்படும், கோயிலுக்குள் காணப்படும் மரம் (2,5)
10. மகாராணியை பட்ட---- என்று குறிப்பிடுவதுண்டு (3)
12. நதி மூலம் ---- மூலம் ஆகியவற்றை ஆராயக்கூடாதாம்! (2)
14. கடவுள் ----- உள்ளவர் ஆத்திகர் (5)
16. கண்ணன் வாழ்ந்த இந்த நகரம் இப்போது கடலுக்கடியில் (4)
19. போருக்கு முன் சமாதானம் பேச வீரபாகுவைத் ----- அனுப்பினார் முருகப் பெருமான் (2)

Comments