ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | ஏப்ரல் 29, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | Apr 29, 2022 | Dinamalar Aanmeega Malar
இடமிருந்து வலம்
3. கும்பகோணத்தில் உள்ள ---கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்று (6)
6. தன் ---- காலத் தவறுக்காக மனம் வருந்துவோரை கடவுள் மன்னிப்பார் (4)
7. உதடு - '--- மதுரம் நயனம் மதுரம்' என்பது மதுராஷ்டக வரி (4)
9. காரைக்கால் மாவட்டத்திலுள்ள இத்தலம் ஆதீனம் காரணமாகவும் பிரபலமானது (6)
11. சபரிமலை சாஸ்தாவை தரிசிக்க புனிதமான 18 படிகளில் --- வேண்டும் (2)
12. சரஸ்வதியின் மற்றொரு பெயர் (4)
13. ஏழுமலையான் (6)
16. சுபகாரியம் ராகுகாலத்தில் ---- பெறுவதில்லை (2)
17. சோதனை நேர்ந்தபோதும் பொய் கூறாத தன்மையிலிருந்து சிறிதும் ---- வாழ்ந்தான் ஹரிச்சந்திரன் (4)
18. 'கலையாத கல்வியும் ----- வயதும் ஓர் கபடு வாராத நட்பும்' என்பது அபிராமி அந்தாதியின் ஒரு வரி (4)
19. மதுராவில் உள்ள கண்ணன் கோயில் ----- நதிக்கரையில் உள்ளது (3)
20. '---- கலந்த மாணிக்கவாசக, உன் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால்' என்றார் வள்ளலார் (2)
மேலிருந்து கீழ்
1. கண்ணனைப் பற்றிக் கூறும் நூல் (5)
2. ------- காலத்தில் பக்தி செய்யலாம் என தள்ளிப் போடாதீர்கள். (4)
4. வண்டு கடித்ததால் கர்ணன் தொடையிலிருந்து ---- வழிந்தது (4)
5. இசைஞானம் கொண்ட அப்துல் --- தியாகராஜ கீர்த்தனைகளை பாடுவார் (3)
7. பாரதப் போரில் களபலி கொடுக்கப்பட்டவன் ---வான் (2)
8. தெய்வப்புலவரின் நுால் திருக்----(3)
10. ராஜஸ்தானில் பிரம்மன் கோயில் உள்ள இடம் (4)
11. கட்டைவிரல், குருதட்சணை என்றவுடன் மனதில் தோன்றுபவன் ---- வன் (3)
12. பிரம்மனை ----முகன் என்பதுண்டு (2)
13. ---யாடச் சென்ற பாண்டு மான் வடிவ முனிவர் மீது அம்பு செலுத்திவிட்டான் (3)
14. கர்ணனின் தேரோட்டி (4)
15. மருந்தீஸ்வரர், கபாலீஸ்வரர், பார்த்தசாரதி கோயில்கள் உள்ள பெருநகரம் (3)
16. சைவத் திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியாண்டார் ---- (3)
17. --- மாரீசன் மானாக உருவெடுத்தான் (3)
18. புத்தர் இறந்த இடம் --- நகர் (2)
Comments
Post a Comment