30/04/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஏப்ரல் 30, 2022 | Saturday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Apr 30, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. பெண் பார்க்க போகும் நிகழ்ச்சியில் --- சொஜ்ஜி கொடுத்து உபசரிப்பது வழக்கம்.
3. காசுக்கு ஏத்த ---.
5. கடனை வாங்கி ---ளியானான்.
6. கல்லால் செய்யப்பட்ட துாண்: சிவாஜி கணேசன் நடித்திருந்த திரைப்படம் ஒன்று.
8. மேடு - எதிர்ச்சொல்.
13. பெரிய கோபுரம்.
17. சோளி என்றும் சொல்லலாம்.
19. ஹிந்தி திரைப்பட உலகம் பாலிவுட் என்றால், தமிழ்த் திரைப்பட உலகம்.
20. வயதில் பெரியவர்களை இப்படியும் சொல்லலாம்.

வலமிருந்து இடம்

9. விருந்தில் உணவு பரிமாறுவதற்கு முன் தரப்படும் பானம் - ஆங்கிலத்தில்.
10. உயிரற்ற உடல் ச--- என்பர்.
11. நீதிபதி வழங்கினாலும் --- தான்; நாட்டாமை சொன்னாலும் தீர்ப்பு தான்.
16. அஞ்சல் அட்டை - ஆங்கிலத்தில் போஸ்ட் ---.
21. தமிழகத்தில் உள்ள கோடை வாசஸ்தலம் ஒன்று.

மேலிருந்து கீழ்

1. மகனின் முன்னேற்றத்தில் பெற்றோரின் ----- அதிகம் இருக்கும்.
2. பளபளப்பான பொருள்; ஒப்பனையில் உபயோகிப்பர்.
3. வேலையாள்.
4. பிச்சை.
9. '--- ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்...' - ஒரு பாடல்.
11. ---த வினை எல்லாம் தீர்த்து வைப்பார் இறைவன்.
14. சாலை போட உதவும் பொடிக்கற்கள்.
15. கொரோனா பலரது வாழ்க்கையை தலைகீழாக --- போட்டு விட்டது.
19. எதையும் அவனால் ---வையாக சொல்லத் தெரியவில்லை.

கீழிருந்து மேல்

7. கண்ணால் காணக் கூடிய உடலை --- என்றழைக்கலாம்.
12. குற்றங்கள் குறைய வேண்டுமானால் --- கடுமையாக இருக்க வேண்டும் - கலைந்துள்ளது.
18. ஒரு வேண்டுதலுக்காக, உணவு உண்ணாமல் இருக்கும் நிலை.
20. முதியவர் --- வலியால் நடக்க முடியாமல் சிரமப்படுவார்.
21. அவன் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற, பிறர் தந்த --- தான் காரணம் - கலைந்துள்ளது.

Comments