ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | மே 13, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | May 13, 2022 | Dinamalar Aanmeega Malar
இடமிருந்து வலம்
2. திருமாலின் மறுபெயர் (4)
6. பிரபல மராத்திய மன்னனின் குலதெய்வம் பவானிதேவி (3)
8. பெண்கள் சகவாசம் சிறிதுமின்றி வளர்ந்தவர் --சிருங்கர் (3)
10. சிவனின் கையில் உள்ள உடுக்கை வகை (3)
11. உலகம் (2)
12. 'அம்மையே ---- ஒப்பிலா மணியே' என்கிறது திருவாசகம் (3)
14. பிறருக்கு இது ---. ஆனால் சிவபக்தருக்கு இது திருநீறு (4)
17. திருவாரூர் மாவட்டம் -- என்ற தலத்தில் உள்ளது பிரபல முருகன் தலம் (4)
19. கைகள் குவிந்த நிலை உணர்த்துவது (5)
20. சூரபத்மனின் தம்பி ----கன் (2)
21. குமரகுருபரர் பாடியது --கலாவல்லி மாலை (3)
22. வாழ்வின் பெரும்பகுதியை அக்னித்தலத்தில் கழித்தவர் (4)
23. அஷ்டமாசித்திகளில் ஒன்று --ர்ஷணம் (2)
24. ராமர் இதைப் பின்தொடர்ந்ததால் மனைவியை இழந்தார். (2)
25. அருந்ததியின் கணவர் (5)
மேலிருந்து கீழ்
1. பாண்டவர்களில் இருவரின் தாய் (3)
2. திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது பிரபல ----பாளையம் பவானி அம்மன் திருக்கோயில் (3)
3. பாதுகைகளை வைத்து அரசாண்டவனின் மனைவி (4)
4. இந்த திருத்தலத்தில் இறந்தாலே முக்தி என்பார்கள் (2)
5. ஹரிவராசனம் எனத் தொடங்கும் பிரபல ஐயப்பன் பாடலில் இடம் பெறும் வரி 'களப் கேசரி ---- வாகனம்' (2)
7. பிரம்மசர்யம், கிருஹஸ்தம், -----பிரஸ்தம், சன்யாசம் (3)
9. கண்ணனின் ஒரு பெயர் (3)
11. அசோக வனத்துக்கு ராவணன் வந்தபோது -----லைக் கிள்ளிப் போட்டு அதை ராவணனாக பாவித்து சீதை பேசினாள் (2)
12. கோட்டைச் சுவர் (3)
13. விட்டலன் (7)
14. மார்க்கண்டேயன் கடவுள் அருளால் ----- பெற்றவன் (5)
15. கடவுளுக்கு ஏழை -- என்ற வேறுபாடு கிடையாது (6)
16. 'பொன்னழகு மின்னிவரும் --- ண மயில் கந்தா, கண்மலரில் தன் அருளைக் காட்டிவரும் கந்தா' என்கிறது தெய்வம் திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் பாடல் (2)
17. திருமாலை ----- பெருமான் என்பது வைணவர்களின் வழக்கம் (2)
18. 'கற்பூர நாயகியே ----வல்லி , காளி மகமாயி கருமாரியம்மா ' (3)
21. ----- அமாவாசை, போதாயன அமாவாசை என்று இரண்டு விதமாக பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (3)
23. நடராஜரை ----- வல்லான் என்பர் (2)
Comments
Post a Comment