ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | மே 20, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | May 20, 2022 | Dinamalar Aanmeega Malar
இடமிருந்து வலம்
3. கைகேயியின் மனதை ராமனுக்கெதிராகத் திருப்பியவள் (2)
4. கண்ணன் கோபியருடன் ஆடிய நடனத்தை ______லீலை என்பார்கள் (2)
5. தெலுங்கானா மாநிலத்தில் சமத்துவச் சிலையாக அமர்ந்திருப்பவர் (5)
6. ராமாயணத்தில் மூவரின் அண்ணி (2)
8. கீதோபதேசம் செய்தவர் பிறந்த நகர் (3)
9. லட்சுமிதேவியை ---- மகள் என்பர் (2)
10. கலசம் - ஒரு ராசி (4)
12. முருகப் பெருமானுக்கு -- மனைவியர் (2)
13. சிவ ஆலயங்களில் நந்தி, பலிபீடம் மற்றும் இதை அருகருகே காணலாம் (5)
16. எதிலும் ----- றற்ற நிலையை துறவறம் எனலாம் (2)
17. வள்ளியை, அவர் தோன்றிய இனத்தின் காரணமாக, இப்படியும் குறிப்பிடுவதுண்டு (5)
20.'------ பொருளில் இசையும் நானே ஆடும் கலையின் நாயகன் நானே' என விறகுவெட்டியாக வந்த சிவபெருமான் பாடுவதாக அமைந்துள்ளது ஒரு திரைப்படப் பாடல் வரி (4)
21. வட இந்தியாவில் தசராவில் இந்தப் பண்டிகையின்போது ராவணனின் உருவ பொம்மையை எரிப்பர் (4)
22. இந்த மன்னனின் வழித்தோன்றல்கள்தான் பாண்டவர்களும் கவுரவர்களும் (2)
மேலிருந்து கீழ்
1. ' ___ முகமும் ஈராறு கரமும் தீராத வினைதன்னைத் தீர்க்கும்' (3)
2. ஜகத்குரு சந்திரசேகர சரஸ்வதி இந்த நட்சத்திரத்தில் பிறந்தார் (4)
3. மச்சத்துக்கும் வராகத்துக்கும் இடையே (4)
4. கண்ணனின் மனம் கவர்ந்தவள் (2)
6. 'ஈரேழு புவனங்கள் படைத்தவனை கையில் ஏந்தி ------ பாலுாட்டி தாலாட்ட தாயே என்ன தவம் செய்தனை யசோதா' என உருகுகிறது ஒரு பாடல் (4)
7. அருணாசலேஸ்வரர் தலப் பெயரில் உள்ள கிரி (2)
9. முதல் திருக்குறளின் முதல் வார்த்தை (3)
10. தட்சிணாமூர்த்தி, வியாழ கிரக அதிபதி ஆகியோரை இப்படிக் குறிப்பிடுவதுண்டு (2)
11. இது ஓரிடம், பாவம் ஓரிடமா (2)
12. கடவுள் வாழ்த்து என்பதை - வாழ்த்து என்பதுண்டு (2)
13. பாலை நிலத்துக்குரிய பெண் தெய்வம் (4)
14. இசை நிகழ்ச்சியின் இறுதிப் பாடலை இப்படிக் குறிப்பிடுவதுண்டு (5)
15. திருமால் --- கடலில் பள்ளி கொண்டிருக்கிறார் (2)
16. '------ மலைபோல் மேனி பவளவாய்க் கமலச் செங்கண்' என்பது ஆழ்வாரின் பாடல் வரி (4)
18. சாம்பசிவன் என்பதன் சுருக்கம் (3)
19. குருவாயூரில் நேர்த்திக் கடனை செலுத்தப் பயன்படும் எடைக்கருவி (3)
21. தினமும் 108 முறை ஸ்ரீ --- ஜெயம் எழுதுபவர்கள் உண்டு (2)
Comments
Post a Comment