22/05/2022 | varamalar kurukezhuthu potti | தினமலர் வாரமலர் குறுக்கெழுத்து போட்டி


தினமலர் - வாரமலர் - மே 22, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.

இடமிருந்து வலம்:

1.இக்கரைக்கு அக்கரை --.
5.'-- இன்றி அமையாது உலகு' - குறள்.
10.பாலின் நிறம்.
15.மலேசிய நாட்டில் -- மரங்கள் அதிகமாம்.
16.இசைப்பாட்டு.
18.சிக்னலில் இந்த நிற விளக்கு எரிந்தால், வண்டிகள் நிற்க வேண்டும்; அபாயத்தை குறிக்கும் நிறமும் கூட.

வலமிருந்து இடம்:

2.பொருள் எரிந்த பின் மிஞ்சும் துகள்; சிமென்டின் நிறமும் கூட.
3.வெற்றியாளர் ஆங்கிலத்தில்.
4.ஆற்றை மட்டுமல்ல, சாலையைக் கடக்கவும் இது கட்டப்படுகிறது.
6.துக்கத்தை குறிக்கும் நிறம்; ஆனால், சிலருக்கு -- தான் பிடித்த கலராம்.
7.காலையில் மலரும் பூக்கள், மாலையில் -- விடும்.
12.அற்பாயுளில் இறந்தவர்கள் --யாக திரிவராம்.
14.கூந்தல் அலங்காரத்திற்கு பயன்படும் பூ; பூஜைக்கு உகந்ததல்ல.
17.உறவினர் வேறு சொல்; --த்தார்.
21.மங்களகரமான நிறம்; கிருமிநாசினியாக பயன்படும் சமையலறை பொருளும் கூட.

மேலிருந்து கீழ்:

1.முதிர்ந்த பழுத்த இலையின் நிறம்.
9.நம் தேசியக் கொடியின் மேற்புறமுள்ள நிறம்.
10.உஷ்ணம்.
12.இது நிறம் மட்டுமல்ல, ஒரு பழத்தையும் குறிக்கும்.
16.-- வந்திட பத்தும் பறந்திடும்.

கீழிருந்து மேல்:

4.கோடைக்கேற்றது குளிர் --.
5.பொதுவாக வானத்தின் நிறம்; கண்ணனும் இந்த நிறம் தானாம்.
6.நிறம் - ஆங்கிலத்தில்.
7.இதன் வண்ணங்கள் ஏழு.
8.எம்.ஜி.ஆர்., இரட்டை வேடங்களில் நடித்திருந்த ஒரு திரைப்படம்; --- நெருப்பும்.
11.மேஜர் - எதிர்ச்சொல்.
13.மாட்டு பொங்கலன்று மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் ---வர்.
19.சாயம் என்றும் சொல்லலாம்.
20.அல்ட்ரா வயலட் - தமிழில்.
21.மயிலாப்பூர் - சுருக்கமாக.

Comments