ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | மே 27, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | May 27, 2022 | Dinamalar Aanmeega Malar
இடமிருந்து வலம்
1. தாணுமாலயன் அருளும் தலம் (6)
4. ஆதவனுக்கான பண்டிகைக்கு முன் தினப் பண்டிகை (2)
7. மார்கழி திருவாதிரையில் செய்யப்படும் சிறப்பு உணவு (2)
8. பெரிய புராணத்தை எழுதியவர் --- கிழார் (2)
9. தேவர்களை இப்படியும் குறிப்பிடுவர் (4)
10. துர்வாசர் என்றதும் நினைவுக்கு வரும் அவரது குணம் (3)
12. கண்ணன் ----- குலத்தில் வளர்ந்தார் (3)
14. பாண்டுரங்கன் குறித்து அவரது பரம பக்தர்கள் பாடிய பஜனைப் பாடல் வகை (5)
17. தன் தாய் கேட்ட இரு வரங்கள் குறித்து அறிந்ததும் பரதனுக்கு மிகுந்த தலை ---- ஏற்பட்டது (3)
18. முதல் தமிழ் நட்சத்திரம் (4)
19. கிருஷ்ணாஷ்டகத்தில் இடம் பெறும் வரி 'கிருஷ்ணம் ------ ஜகத்குரும்' (3)
20. பழையனுார் ______ அம்மனை இசக்கி அம்மன் என்றும் கூறுவர் (2)
21. காசி ஈசனின் பெயரின் முற்பகுதி (3)
23. ‘மார்கழித் ------ மதிநிறைந்த நன்னாளாய் (4)
மேலிருந்து கீழ்
2. '------- களப செந்தாமரைப் பூம்பாதச் சிலம்பு' எனத் தொடங்குகிறது விநாயகர் அகவல் (3)
3. அறுபடைவீடுகளில் ஒன்று ------குன்றம் (6)
4. இந்த சித்தரை சீன தேசத்தவர் என்றும் கூறுவதுண்டு (3)
5. சுகர் என்ற மகரிஷியின் பெயரைக் கேள்விப்பட்டதும் நினைவுக்கு வரும் பறவை (2)
6. சங்கீத உபன்யாசத்துக்குப் புகழ் பெற்றவர் சேங்காலிபுரம் ---ராம தீட்சிதர் (4)
8. இந்தப் பறவையைக் கொடியில் கொண்டவன் குமரன் (3)
11. ராமபிரான் இது தரித்து காட்டுக்குச் சென்றார் (4)
12. ----- இருக்க பயமேன்? (2)
13. வெங்கடேசப் பெருமாளை வளர்த்த அன்னை (5)
15. பெரியவர்களிடம் ----- நடந்து கொள்ள வேண்டும் (5)
16. 'துங்கக் --- முகத்துத் துாமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா' (2)
18. நாற்பது வருடங்களுக்கு ஒருமுறை காட்சி அளிப்பவர் காஞ்சி ----வரதர் (3)
19. --- என்றதும் நமக்கு பீமன், அனுமன், கடோத்கஜன் போன்றோர் நினைவுக்கு வருவர் (3)
22. ஹரிஹரனின் மறுபெயர் தர்ம சா---(2)
Comments
Post a Comment