ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | ஜூலை 01, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | July 01, 2022 | Dinamalar Aanmeega Malar
இடமிருந்து வலம்
1. கடவுளின் திருவடி - 'ஏறி இறங்கும் விளையாட்டையும்' குறிக்கிறது (6)
4. திருச்சானுாரை அலமேலு ----புரம் என்பதுண்டு (3)
6. சமண முனிவரான ---- பலிக்கு சிரவணபெல்கொலாவில் மிக உயர்ந்த சிலை உண்டு (2)
7. சென்னையில் உள்ள ------ கோயிலுக்கு சக்ரவர்த்தி சிவாஜி விஜயம் செய்திருக்கிறார் (6)
10.டி.எம்.எஸ். பாடி பிரபலமான 'உள்ளம் உருகுதையா' என்ற பாடலை எழுதிய பெண்மணியின் பெயர் ஆண்டவன் ----- (3)
11. கர்ப்பரட்சாம்பிகை அருளும் தலம் திருக்-----க்காவூர் (2)
12. இந்த கிரகத்துக்கு உகந்த தானியம் பச்சைப் பயிறு. இதன் திசை வடக்கு (3)
13. காவிரி, கொள்ளிடம் ஆகிய இரண்டுக்கும் நடுவே அமைந்த திருத்தலம் (5)
15. ராமாயணத்தின் ஏழு பகுதிகளில் முதலாவது காண்டம் (2)
16. '---- மட்டும் கண்டால் கடவுள் தெரியாது' (3)
17. ---பரம் என்பது இம்மை மற்றும் மறுமையைக் குறிக்கிறது (2)
19. மதுராந்தகத்தில் அருள்கிறார் ----- ராமர் (2,3)
20. குமாரஸ்தவத்திலுள்ள '_______ பதயே நமோநமோ' என்ற வரிக்குப் பொருள் 'ஆறுமுகப் பெருமானே தலைவனே உன்னை வணங்குகிறேன்' என்பதாகும் (4)
22. ராம சகோதரர்களில் இளையவன் (6)
மேலிருந்து கீழ்
1. தஞ்சாவூர் மேலவீதியில் உள்ளது ------ காமாட்சி கோயில் (4)
2. நம்மில் பலருக்கும் எம---- உண்டு (3)
3. 'ஞானப்பழத்தைப் பிழிந்து' என்ற பாடலைப் பாடியவர் கே.பி. சுந்தரா-----(3)
5. பாலாறு மற்றும் வேகவதி ஆறுகளின் கரையில் அமைந்த 'கோயில் நகரம்' (3)
8. '----ஜோதி வடிவில் ஐயப்பனைக் காண்கிறார்கள் பக்தர்கள் (5)
9. தன் பக்தன் ----பத்திரரின் துயர் தீர்க்க விறகுவெட்டி வேடத்தில் வந்தார் சிவபெருமான் (2)
10. உமை அன்னையைத் தவிர்த்து சிவபெருமானை மட்டும் வணங்கிய முனிவர் (4)
11. தலையில் குடத்தை வைத்து ஆடும் நடனத்தை ---கம் என்பார்கள் (2)
13. ராவண தேசத்தின் தற்போதைய அதிகார பூர்வப் பெயர் (4)
14. இது உண்டானால் ராகு கேது ஸ்தலங்களுக்குச் சென்று பரிகாரம் செய்வார்கள் (2,3)
18. அங்க தேசத்தை ஆண்ட வள்ளல் (4)
19. ராமபிரான் - ---- பத்தினி விரதன் (2)
21. அண்ணாமலை ஈசனின் துணைவி உண்ணா--- அம்மன் (2)
Comments
Post a Comment