03/06/2022 | aanmeega malar kurukkeluthu potti | தினமலர் ஆன்மீக மலர் குறுக்கெழுத்து போட்டி


ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | ஜூன் 03, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | June 03, 2022 | Dinamalar Aanmeega Malar

இடமிருந்து வலம்

4. பெயர் - திருமண் (3)
6. திருவெண்காடர் என்றும் அழைக்கப்பட்ட இந்தத் துறவியின் சமாதி திருவொற்றியூரில் உள்ளது (7)
7. ராமா, லட்சுமணா, ________ சதருகனா (3)
9. இலங்கேஸ்வரன், தசமுகன் (4)
11. 'பற்றார் தம்முனைப் படுமணி --- ஒற்று 
ஆராய்ந்த வகை உரைத்தன்று' என்கிறது குறள் (4)
12. மகாபலியின் மகனான --------சூரனை கிருஷ்ணர் வென்றார் (2)
13.'குலம் செய்த பாவத்தாலே --- பகை தேடிக்கொண்டாய் ' என்று இந்திரஜித் யுத்த காண்டத்தில் வருந்துகிறான் (3)
14. 'எல்லாம் இன்ப --------' என்று பாடினார் பாரதியார்
16. நாணயத்தைக் கொண்டு பூவா _ போட்டுப் பார்ப்பதைவிட கடவுள் சன்னதியில் பூ போட்டுப் பார்ப்பதை நாடுபவர்கள் உண்டு (3)
18. ஐயப்பன் வாகனம் என அறியப்படும் விலங்கு (2)
20. விபீடணன் மகளின் பெயரின் முதல் பாதி (2)
22. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அமைந்துள்ளது ஆயிரங்கால் ----- (5)
23. இந்தியாவில் மிக மிக அதிக அளவில் காணிக்கை செலுத்தப்படும் கோயில் இங்குள்ளது (4)
24. கல்லாக மாறிய அகலிகை ராமனின் பாதம்பட்டதும் --விமோசனம் பெற்றாள் (2)

மேலிருந்து கீழ்

1. அபிமன்யுவின் தாய் (4)
2. ராமாயண நாயகனின் மாமனார் (4)
3. தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகத்துக்குப் பெயர் பெற்ற இந்த ஊர் மறைக்காட்டு நாதர் கோயிலுக்கும் புகழ் பெற்றது (6)
5. சபரிமலையில் --------ஜோதியைக் காண கூட்டம் அலைமோதும் (3)
7. மலேசியாவில் இங்கு மிகமிக உயரமான முருகனின் உருவத்தைக் காணலாம் (5)
8. வாலியின் மனைவி, அங்கதனின் தாய் (2)
10. இந்தத் தொழில் செய்தவரின் அபவாதச் சொல் காரணமாக ராமபிரான் சீதையைக் காட்டுக்கு அனுப்பினார் (4)
11. அக்னி தேவனின் வாகனம் (2)
13. சித்தர் குகைகளையும் பல மூலிகைத் தாவரங்களையும், எழுபது கொண்டை ஊசி வளைவுகளையும் கொண்டது (5)
15. சந்திரகுல மன்னன், தேவயானியை மணந்தவன் (3)
17. திருநெல்வேலியில் அருள் புரிபவர் ----மதி அம்மன் (3)
19, காஞ்சியில் உள்ளது சங்கர---.
21. பன்னிரண்டில் இரண்டாவது  --ராசி (3)

Comments