03/06/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூன் 03, 2022 | Friday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | June 03, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. முன்னாள் முதல்வர் காமராஜரின் தாய் பெயர்.
4. ஜெயில் - தமிழில். 
6. குத்துச்செடி நிறைந்த இடம்.
7. சத்துணவு சாப்பிட்டது அவனுக்கு --- தந்தது.
8. மேடையில் --கை, மோனையுடன் பேசினான்.
9. நெற்றியில் வைத்துக் கொள்ளும் மங்கல அடையாளம்.
12. சிவப்பு - ஆங்கிலத்தில்; அஜித் நடித்திருந்த திரைப்படமும் கூட.
13. இரண்டு பன்மை என்றால் ஒன்று --.
15. பூட்டை திறக்க உதவுவது.
17. தீமை.
18. வெற்றிக் கொடி ----.

வலமிருந்து இடம்

3. சம்பவம் - வேறொரு சொல்.
5. வெற்றி பெற --- நாட்கள் போராட வேண்டியிருந்தது.
10. மந்திர சக்தியுள்ள மாத்திரை ---கை.
11. அந்த பிரபலம் சொத்துக் --ப்பு வழக்கில் கைதானார்.
14. மற்றவர்கள் பேசுவதை --- கேட்பது கெட்ட பழக்கம்.
16. ஆசை; பற்று.

மேலிருந்து கீழ்

1. கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் ---.
2. புனித ஊர் பெயரை தன்னோடு வைத்திருக்கும் பவித்திரமான பல வண்ணப்பூ,
3. --- நில்.
4. பலர் அல்ல ----.
8. உயரமான சிகரம்.
9. தலைச்சுண்டு; தலையிலுள்ள அழுக்கு - கலைந்துள்ளது.
10. ஆசிரியர்.
16. வேடன் - வேறொரு சொல் --வன்.

கீழிருந்து மேல்

5. இதுவும் கொட்டு வகையைச் சேர்ந்த இசைக்கருவி தான்.
6. அருணகிரிநாதர் பாடியது திருப்---.
14. விலங்குகளின் மேல் இருக்கும் ஒரு வகை பூச்சி.
15. சிறுதானிய வகை.
17. தீபாவளியை --திருநாள் என்றழைப்பர்.

Comments