05/06/2022 | varamalar kurukezhuthu potti | தினமலர் வாரமலர் குறுக்கெழுத்து போட்டி


தினமலர் - வாரமலர் - ஜூன் 05, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.

இடமிருந்து வலம்:

1.தர்பார் வேறொரு சொல்.
3.அரண்மனையில் சிரிக்க வைப்பவர்.
5.சேனாதிபதி என்றும் சொல்லலாம்.
9.அரசரை புகழ்ந்து பாடி பரிசு பெற்று செல்பவர்.
11.ராஜ்யத்தில் -- ராணி ஒருவர்தான் இருக்க முடியும்.
13.மேகம்-வேறொரு சொல்.
15.இளவரசரின் பிறந்தநாளில் அரண்மனையில் - பாடல் கொண்டாட்டம்தான்.
16.ஆசிர்வதிக்கும்போது, பல்லாண்டு வாழ்க என்ற அர்த்தம் தரும் வகையில், --- வாழ்க என்று கூறுவர்.

வலமிருந்து இடம்:

7.மந்திரி - வேறொரு சொல்.
8.ஒருவகை மீன்; பெண்களின் கண்களோடு ஒப்பிடப்படுவது - கடைசி எழுத்து இல்லை.
12.மன்னர், மக்கள் நலனை அறிய இரவில் மாறுவேடம் அணிந்து உலா வருவது.
17.அரசன், அரசவையில் அமரும் ஆசனம்.

மேலிருந்து கீழ்:

1 . அரண்மனைக்குள் அரசியாரின் இருப்பிடம்.
2.மருத்துவர் - வேறொரு சொல்.
3.நெற்றி ---வை நிலத்தில் விழ பாடுபட்டான்.
4.அரசனது படை வீரர்கள் -- தவறாமல் பணி புரிபவர்கள்.
6.அரசாங்கம் புது---- போட்டு, வரி வசூலித்தது - கலைந்துள்ளது.
7.சோறு - வேறொரு துாய தமிழ்ச் சொல்.
10.சோழ அரசனை குறிப்பிட இச்சொல்லை பயன்படுத்துவர்.
12.நாட்டியம் - வேறொரு சொல் கலைந்துள்ளது.
14.மன்னனாக தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு சூடப்படுவது; மகுடம் என்றும் சொல்லலாம்.

கீழிருந்து மேல்:

15.வேத சாஸ்திரங்கள் என்றும் சொல்லலாம் - கடைசி எழுத்து இல்லை.
16.பெரும்பாலான அரசர்கள் --- தவறாமல் ஆட்சி செய்தனர்.

Comments