10/06/2022 | aanmeega malar kurukkeluthu potti | தினமலர் ஆன்மீக மலர் குறுக்கெழுத்து போட்டி


ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | ஜூன் 10, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | June 10, 2022 | Dinamalar Aanmeega Malar

இடமிருந்து வலம்

1. சமயக் குரவர்கள் நால்வரில் 'அழகர்' ------ (5)
3. பரமன் கழுத்தில் நெளிவது (3)
5. கிராம காவல் தெய்வம் (4)
6. அர்ச்சனைக்குப் பயன்படுத்தப்படுவது (3)
7. விழா சேர்ந்தால் சஷ்டியப்தபூர்த்தி. கண்டன் சேர்ந்தால் சபரிமலைவாசன் (2)
8. ஆதிசேஷனும் சயனப் பெருமாளும் இதன் மேல் (5)
9. சபரிமலை கோயிலில் பூஜைகளை ஏற்று நடத்துபவரை மேல்---- என்பார்கள் (3)
11. உற்ஸவங்களின்போது ----- வெடிகளை வெடித்து மகிழ்பவர்கள் உண்டு (2)
12. '------- சிவனே போற்றி, என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி' (6) 
15. பாண்டுரங்கன் இந்த பக்தையின் வேடத்தில் வீட்டுவேலைகள் செய்தார்! (5)
17.மகாபலிபுரத்தில் உள்ளது கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து எனப்படும் --- (2)
18. திருநெல்வேலியின் முந்தைய பெயர் (5)
19. ஆதிசங்கரர் எழுதிய நூல் -- கோவிந்தம் (2)
20. சோம்நாத் போன்ற கோயில்களை இடித்துத் தள்ளிய இஸ்லாமிய மன்னன் (3)

மேலிருந்து கீழ்

1. குசேலரின் மறுபெயர் (4)
2. அபிஷேகப் பொருள்களில் ஒன்று (3)
3. வியக்கத்தக்க செயல்களைச் செய்த பெரியவர்கள் '------ இப்படிச் செய்தேன்? இல்லை. என்னுள் உறைந்த கடவுளின் செயல் இது' என்பதுண்டு (2)
4. நல்லோருக்கும் சோதனைகள் உண்டாவது அவர்களது ---வினை காரணமாக இருக்கக்கூடும் (3)
5. விநாயகன் (5)
8. சிவபெருமான் தன் உடலில் சரி ---யை பார்வதிதேவிக்கு அளித்தார் (2)
9. அர்த்த சாஸ்திரம் படைத்தவர் ----கியர் (3)
11. வேங்கடவனின் மறுபெயர் ஸ்ரீனி ---- ன் (2)
12. கடவுள் (4)
13. மாயவரத்தின் தற்போதைய பெயர் மயிலா ----- (3)
14. ராமானுஜரின் பட்டப் பெயர் (5)
16. பாண்டுரங்க பக்தரான கோராகும்பர் மண்பாண்டங்கள் செய்யும் இந்தக் குலத்தைச் செய்தவர் (4)
17. வட இந்திய பக்தர்கள் வெங்கடாஜலபதியை இப்படி அழைப்பர் (3)
18. சூரபத்மனைக் கொன்ற ஆயுதம் (2)

Comments