24/06/2022 | aanmeega malar kurukkeluthu potti | தினமலர் ஆன்மீக மலர் குறுக்கெழுத்து போட்டி


ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | ஜூன் 24, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | June 24, 2022 | Dinamalar Aanmeega Malar

இடமிருந்து வலம்

2. சுக்கிரருக்கு உகந்த தினம் (3)
4. பாசக் கயிறு வீசுபவரின் வாகனம் (3)
5. எழுத எழுத்தாணி. வரைய? (3)
6. அருணகிரிநாதரால் பாடப்பட்ட -- நல்லுார் கோயிலுக்கு அருகே வாரியாரின் அதிஷ்டானம் உள்ளது (4)
8. பஞ்சாட்சர மந்திரம் (5)
10. 'ஆடும் --------, வேல், அணிசேவலென' எனத் தொடங்குகிறது ஒரு கந்தர் அனுபூதி பாடல் (2)
11. ராவணனின் ------ கும்பகர்ணன் (3)
15. உலகின் மிக உயர்ந்த முருகன் சிலையை மலேசியாவில் உள்ள --- மலையில் காணலாம் (3)
16. சிவகுரு ஆர்யாம்பாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்த ஞான மகான் (5)
17. தான் குற்றமற்றவள் என்பதை நிரூபிக்க ---- னிப் பிரவேசம் செய்தாள் சீதை (2)
19. தீய ஆவிகளை ------ கருப்பு என்பதுண்டு (3)
22. பிரம்மனுக்கு ஆக்கல், சிவனுக்கு அழித்தல் என்றால் திருமாலுக்கு? (4)
24. இல்லற வாழ்வைத் துறந்து துறவு மேற்கொண்டவர் (4)
25. தேவன் இணைந்தால் சிவபெருமான். மகம் இணைந்தால் கும்பகோண அபூர்வ விழா (2)

மேலிருந்து கீழ்

1. கோயம்புத்துாருக்கு அருகில் உள்ள, அருணகிரிநாதரால் பாடப்பெற்ற பிரபல முருகத்தலம் (5)
2. விரத நாட்களில் உணவில் முழுவதும் தவிர்க்கப்படும் உணவுப்பொருள் (5)
3. மழை வந்தால் முருகனின் வாகனப் பறவை --- ----- ஆடுவது இயல்பு (2,4)
5. ------ மனதோடு கடவுளைத் தொழுதால் நன்மை விளைவது நிச்சயம் (2)
7. ராகு என்றதும் நினைவுக்கு வரும் மற்றொரு கிரகம் (2)
9. மாணிக்கவாசகரின் மறுபெயர் (5)
12. சிவனின் சிரத்தில் உள்ளது --- நிலவு (2)
13. இதில் தணல் வைத்து சாம்பிராணி போடுவார்கள் (5)
14. திருநின்றவூரில் பிறந்தவர் நாயனார் (4)
18. உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள, திவ்யதேசமென்று கருதப்படுகிறது பத்ரி ----- கோயில் (2)
20. கர்நாடகா, ஆந்திராவில் பாயும் நதியின் சுருக்கப் பெயர் (3)
21. சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய, ஒழுக்க நெறிகளைக் கூறும் நூல் ---- னெறி (2)
22. முக்தி தரும் ஏழு தலங்களில் ஒன்று. பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றும் அமைந்துள்ளது (2)
23. கேட்டதை அளிக்குமாம் கற்பகத் --- (2)

Comments