02/07/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஜூலை 02, 2022 | Saturday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | July 02, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1.கல்லுாரியில் வேலைவாய்ப்பு --- நடைபெற்றது.
2. திரும்ப பெறுதல்.
4. திறமையால் முன்னேறி உயர் பதவி ---த்தார்.
6. தீராத வியாதியால் ரொம்பவும் ---ப்பட்டார்.
10. அந்தமானுடன் சேர்த்து சொல்லப்படும் தீவு.
12. சர்க்கரை நோயாளிகளுக்கான ஒரு காய் ---க்காய், பாகற்காய் அல்ல.
14. இடத்திற்கு ஏற்றாற்போல தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும் ஒரு உயிரினம் ---சோந்தி.
15. அலங்காரம்; மேக்கப் - தமிழில்.
17. பலர் அறியச் சொல்லுதல் என்பது பறை ---தல் என்பர் - கலைந்துள்ளது.
18. விரைவு.

வலமிருந்து இடம்

7. ஊதாரிக்கு எதிரானவன் - முற்று பெறவில்லை.
8. --- பகவானுக்கு உகந்த நாள் வியாழன்.
9. '---முழங்கு ' - எம்.ஜி.ஆர்., நடித்திருந்த திரைப்படம் ஒன்று; பாரதிதாசனின் முழக்கமும் கூட.
13. பெண்.
16. வெறும் வாயை மெல்பவனுக்கு --- கிடைத்து விட்டால் போதும்.
19. கண்ணனின் தாய்மாமன்.

மேலிருந்து கீழ்

1. ஊதிய உயர்வு கேட்டு --- போராட்டம் நடந்தது.
3. பக்தர் - பெண்பால்.
5. எமனின் வேலையாட்கள்.
6. சமீபம், கிட்டே.
9. செய்தி என்றும் சொல்லலாம்.
15. தூதுவன்.
16. அழகன் - பெண்பால்.

கீழிருந்து மேல்

11. குரல் வளம் கிடைக்க குழந்தைகளுக்குப் புகட்டப்படும் உரை மருந்து.
14. புலி --- பாய்வதற்கு தான்.
18. செதுக்கப்பட்டது; வெற்றிலையோடு சேர்த்து உண்பது பாக்குச் ---.
19. படத்தில் வரும் சம்பவங்கள் ---யே யாரையும் குறிப்பிடுவன அல்ல; திரைப்பட எச்சரிக்கை.

Comments