ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | ஜூலை 08, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | July 08, 2022 | Dinamalar Aanmeega Malar
இடமிருந்து வலம்
1. இந்திரனின் வெள்ளை யானை (5)
4. இந்த வம்சத்தில் பிறந்தவர் ராமர் (2)
8. முன்னோரின் திதியன்று இந்தப் பறவைக்கு அன்னம் படைப்பதுண்டு (3)
9. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் (7)
11. -------டையான் நோன்பை சாவித்ரி நோன்பு என்றும் கூறுவர் (2)
12. சிவபெருமானை ------- எரித்த விரிசடைக்கடவுள் என்பதுண்டு (5)
13. இறுதிக் காலமும் இறப்பும் பலருக்கு ------- சொப்பனமாக உள்ளது (3)
15. '-------வனை மது சூதனனை மாதவனை' எனத் தொடங்குகிறது ஒரு பெரியாழ்வார் பாசுரம் (2)
17.சூரியனை 'கதிரவா, ஆதவா, ---' என்று பலவிதங்களில் அழைக்கலாம் (4)
19. விநாயகரின் ------- மூஞ்சூறு (4)
20. திருவள்ளுவரின் முதல் பத்து ----களும் கடவுளைப் போற்றுகின்றன (3)
21.ஆதிசிவன் ------- பணிந்து அருள் பெறுவோமே (2)
22. ஐம்பத்தாறாவது தமிழ் ஆண்டு. ஓர் இசைக்கருவியின் பெயரும் கூட. (4)
23. பிரணவச் சொல் (2)
மேலிருந்து கீழ்
2. ராமபிரான் சிவபெருமானை பூஜித்த தலம் (6)
3. பத்து முகங்கள் கொண்டதால் இலங்கை வேந்தன் ------ ராவணன் என அழைக்கப்பட்டான் (5)
5. 'சரவணபவ ------- எனப்பாடு, சுகம் பெறும் வழிதனை நீ தேடு' என்கிறது சீர்காழி கோவிந்தராஜனின் ஒரு பாடல் (2)
6. திருச்செந்துாரில் சூர ------ ஒரு பெருவிழாவாகும் (5)
7. ராவணனைத் தன் இசைத் திறமையால் வென்ற முனிவர் (6)
10. மீனாட்சி அம்மன் கோயில் எட்டு ------- கொண்டது. அண்ணாமலையார் கோயிலில் இவை ஒன்பது (6)
11. ஐந்து லட்சம் சதுர அடியாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது இந்தப் புண்ணியத் தலத்தில் உள்ள பிரபல கோயில் (2)
14. வேதங்கள் (4)
16. மகரம், மீனம் ஆகியவற்றுக்கிடையே (4)
17. முருகன், திருமால், பிரம்மன் ஆகியோரின் வாகனங்கள் ----கள் (3)
18. தினமலர் ஆன்மிக மலர் --- தோறும் வெள்ளிக்கிழமையன்று வெளிவருகிறது (3)
19. '------- கணபதிம் பஜேகம்' எனத் தொடங்குகிறது முத்துசாமி தீட்சிதரின் ஒரு பிரபல பாடல் (3)
Comments
Post a Comment