15/07/2022 | aanmeega malar kurukkeluthu potti | தினமலர் ஆன்மீக மலர் குறுக்கெழுத்து போட்டி


ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | ஜூலை 15, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | July 15, 2022 | Dinamalar Aanmeega Malar

இடமிருந்து வலம்

1. சப்தரிஷிகளில் ஒருவரான இவர் எழுதிய நுால் ஜோதிட சாஸ்திரத்தின் முதல் நுாலாகக் கருதப்படுகிறது. (3)
3. சிவனை எதிரியாகக் கருதிய அவரது மாமனார் (4)
5. முன்னோர்களுக்கு உகந்தது ---- அமாவாசை (4)
8. சிவனுக்கான சந்தியா கால பூஜையில் அவருக்கு அரசனுக்குச் செய்வது போல் கொடி, குடை, --- ஆகியவற்றை சமர்ப்பிப்பது வழக்கம் (4)
10. கங்கை வருணன் ஆகியோரின் வாகனமான இது ஒரு ராசியும் கூட (4)
11. ----த்தக்க நாகரிகம் என்பதை சபையில் கடைப்பிடிக்க வேண்டும் (2)
12. ராமனை தசரத புத்திரன் என்றால் முருகனை இப்படிக் குறிப்பிடலாம் (3,3)
14. -------- தீயில் வெளிப்பட்டவர்கள் திரவுபதியும், மீனாட்சியும் (3)
15. மன்னர்களின் முக்கிய ஆயுதம் (2)
16. 'கண்ணா நீ --- உண்டாயா வாயை திறந்து காட்டு' என அதட்டினாள் யசோதை (3)
17. பீமனின் ஆயுதம் (2)
18. மதத் துறவியை இப்படியும் அழைப்பதுண்டு (2)
19. பெரிய புராணம் பாடியவர் --- கிழார் (2)
20. கடோத்கஜன், அபிமன்யு ஆகியோரை முதன்மைப்படுத்திய அந்தக் காலத் திரைப்படம் ---பஜார் (2)
21. வலது கை கொடுப்பதை --- அறியாமல் வைத்திருந்தவன் கர்ணன் என்பர் (3,1)

மேலிருந்து கீழ்

1. நைவேத்யம் செய்யப்பட்ட உணவு (5)
2. குன்று இருக்கும் இடமெல்லாம் --------- இருப்பான் என்பார்கள் (4)
3. துன்பங்களிலிருந்து விடுபட கடவுளின் ------- தேவை (3)
4. சந்திரனைச் சூடியதால் சிவபெருமானை இப்படி அழைப்பார்கள் (6)
6. இறுதியில் 'போதி' சேர்ந்தால் ராவணனுக்கு உகந்த ராகம் (2)
7. திருக்குறளின் பிரிவுகளில் முதல் இரண்டு (3,3)
9. தேவலோகச் சிற்பி (3)
11. பழநியில் உள்ளது --- பாஷாண முருகன் சிலை (2)
12. --- வைத்தியம் என்பது தென்னிந்திய தமிழ் மருத்துவ முறையாகும் (3)
13. முருகன் வரலாறை விளக்கும் பிரபல திரைப்படம் கந்தன் ------.
14. சிவபெருமான் பிட்சாண்டியாகி ------ வேண்டினார். (4)
15. பேரின்பம்தான் நமது ---------க்கு வளம் சேர்க்கும் (4)
16. 'ரா' சேர்த்தால் பிரபல வட இந்திய கண்ணன் தலம். 'ரை' சேர்த்தால் பிரபல தென்னிந்திய அம்மன் தலம். (2)
18. நிழல் - சூரிய தேவனின் மனைவி (2)
19. வில்லேந்தியவர் கோதண்டராமர் என்றால் கடலைக்கடக்க பாலம் அமைத்து இலங்கை சென்றவர் ----- ராமர் (2)

Comments