22/07/2022 | aanmeega malar kurukkeluthu potti | தினமலர் ஆன்மீக மலர் குறுக்கெழுத்து போட்டி


ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | ஜூலை 22, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | July 22, 2022 | Dinamalar Aanmeega Malar

இடமிருந்து வலம்

3. முருகனின் முக்கியத் தலங்களை ----- வீடுகள் என்பர் (4)
5. சிவபெருமானின் இந்தப் பகுதியிலிருந்து உதித்தவன் முருகன் (6)
7. ராமி சேர்த்தால் அம்மன். மன்யு சேர்த்தால் பார்த்தன் மகன் (2)
8. புகை, மது, --------- போன்ற சிற்றின்பங்களை சபரிமலைக்கான விரத காலத்தில் நாடக் கூடாது (2)
12. கையில் கரும்புடன் காஞ்சியில் அருள்கிறாள் -----சி தேவி (3)
13. வைகை ஆற்றில் இவர் இறங்குவது திருவிழாக் கொண்டாட்டம் (6)
14. கண்ணனின் மனதுக்கினியவளில் ஒருத்தி (2)
16. கண்ணை --- காப்பது போல கானகத்தில் ராமனைக் காப்பதில் ஈடுபட்டான் லட்சுமணன் (2)
18. ஆழ்வார் திருநகரியில் பிறந்த --------- மாமுனிகள் ஜீயர் பொறுப்புகளை உருவாக்கினார் (4)
19. ராமன் மறைந்திருந்து கொன்றவனின் மகன் (5)
20. திருமாலின் பத்தினிகளில் ஒருவர் (4)
22. மகாபாரதப் --------- பதினெட்டு நாட்கள் நடைபெற்றது (2)

மேலிருந்து கீழ்

1. '------ இகழ்ச்சி' என்றார் ஆத்திச்சூடியில் அவ்வையார் (4)
2. '------ விரலை வைத்தால் நந்தலாலா உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா' என்றார் பாரதியார் (4)
3. '-------- மலைக்கு அரோகரா' (3)
4. ஆதிசங்கரரால் எழுதப்பட்டது ------- கோவிந்தம் (2)
6. திருமாலின் ---- க்கமலத்திலிருந்து பிறந்தவர் பிரம்மா (2)
7. வள்ளலார் எழுதிய பாடல்கள் தொகுப்பு நூல் (4)
8. விநாயகனும் முருகனும் இதைப் பெற போட்டியில் ஈடுபட்டனர் (4)
9. தேவன் இணைந்தால் சின்னப் பாண்டவன் (2)
10. திருமாலுக்கு உகந்த தெய்வீகத் தாவரம் (3)
11. சபையில் நியாயம் பேசிய துரியோதனின் தம்பி (5)
15. பரதனின் பத்தினி (4)
16. சந்தனம், விபூதி, பால் போலவே இதனாலும் அபிஷேகம் செய்வதுண்டு (4)
17. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்கிறது ஒரு --------- இலக்கியப் பாடல் (3)
18. எவரிடமும் வெறுப்பை விளைவிக்காதது ஹிந்து --------- (3)
21. விருச்சிக ராசிக்கான உயிரினம் (2)

Comments