29/07/2022 | aanmeega malar kurukkeluthu potti | தினமலர் ஆன்மீக மலர் குறுக்கெழுத்து போட்டி


ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | ஜூலை 29, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | July 29, 2022 | Dinamalar Aanmeega Malar

இடமிருந்து வலம்

3. ' _____  _____யாவரும் கேளிர்' என்றார் கணியன் பூங்குன்றனார் (3,2)
5. விஷத்தைக் கழுத்தில் தேக்கிக் கொண்டதால் சிவபெருமானுக்கு இப்படி ஒரு பெயர் (6)
6. ஆடி அமாவாசையைத் தொடர்ந்து வரும் கருட  _____ தினத்தை கருடன் பிறந்த தினமாகக் கொண்டாடுவார்கள் (4)
8. அறுபத்து மூன்று என்ற எண்ணைக் குறிப்பிட்டால் சிவ பக்தர்கள் மனதில் தோன்றும் சொல் (5)
10. நடராஜருக்கு உகந்த நட்சத்திரம் திரு  _____ (3)
12. -- கருத்து கொண்டவர்கள் என்பதால் பாண்டவர்களுக்கிடையே பிளவு உண்டாகவில்லை (3)
15. ராமபிரானின் மற்றொரு திருநாமம் (4)
17. பெரிய கோயிலை எழுப்பியவன்  _____ சோழன் (4)
19. செவ்வாய் கிரகத்தின் வாகனம் ஆட்டுக்  _____ (2)
20. ஒருவர் தெய்வயானை என்றால் மற்றொருவர்? (3)
21. மார்கபந்து ஸ்தோத்திரம்  _____ மகாதேவ தேவ எனத் தொடங்குகிறது (3)

மேலிருந்து கீழ்

1. கேட்டைக்கு அடுத்த இந்த நட்சத்திரம் அமங்கலமானது என்பது தவறு என்கின்றனர் ஆன்றோர் (3)
2. மீனாட்சி அம்மனின் தந்தை மலையத்வஜ  _____ (5)
3. சகுனியைக் கொன்றது  _____ என்று கேட்டால் சகாதேவன் என்பதுதான் விடை (2)
4. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நிஜபாத தரிசனம், கல்யாண உற்ஸவம்,  _____ சேவை, உள்ளிட்ட பல ஆர்ஜித சேவைகள் உள்ளன. (4)
6. இந்த மன்னனின் மகள் என்பதால் பார்வதி என்று அழைக்கப்பட்டார் (4,3)
7. சீரஞ்ஜீவியாக வாழும் நிலையை  _____ நிலை என்றும் குறிப்பிடலாம் (3)
9. 'இவரோடு ஐவரானோம்' என்று இவரிடம் கூறினார் ராமபிரான் (3)
11. லட்சுமிதேவி (5)
13.  '_____ கொள்ள வேண்டாம். யோசித்துச் செயல்படுவோம்' என்று பர்ணசாலையில் லட்சுமணன் கூறியதை சீதை ஏற்கவில்லை. (5)
14. அம்மனின் காவல் தெய்வமாகவும் சப்த கன்னியரில் ஒருவராகவும் அறியப்படுபவர் (3)
18. ராவணனுக்கெதிராகப் போரிட்டு இறந்த கழுகு (3)

Comments