ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | ஆகஸ்ட் 05, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | August 05, 2022 | Dinamalar Aanmeega Malar
இடமிருந்து வலம்
1. ஒரு வகைக் காரை நினைவுபடுத்தும் அனுமனின் பெயர் (3)
4. கண்ணனின் ------- கம்சன் (3)
5. ----- காலம் என்பது பகலும் இரவும் சேரும் நேரம் (4)
6. சென்னை மயிலாப்பூரில் உள்ளது தொன்மையான ------- அம்மன் கோயில் (4)
7. மகாபலியின் முன் வாமனர் ---- ரூபம் எடுத்தார் (3)
9. சின்மயானந்தரிடம் துறவற தீட்சை பெற்றவர் -------னந்த சரஸ்வதி சுவாமிகள் (2)
10. சிவபெருமான் கையில் உள்ள விலங்கு.
11. பீமனின் ஆயுதம், அர்ஜுனனின் ஆயுதம் (2,2)
13. சனீஸ்வரனுக்கு உகந்த தலம் திரு-----ளாறு (2)
14. தன்னடக்கம் வேண்டுமே தவிர ------ பெருமை கூடாது (2)
15. ஆந்திரப் பகுதியின் கலாசார நடனம் ------புடி (4)
16. 'ஏடு கொண்டலவாடா, வெங்கட் -----, கோவிந்தா கோவிந்தா' (3)
17. சிவனின் தலையில் இதைக் காணலாம் (2)
18. காளிதாசனின் ஒரு நுால் இது துாது அனுப்பியது தொடர்பானது (3)
19. 'நேயத்தே நின்ற ------- அடி போற்றி' என்கிறது திருவாசகம் (4)
20. காஞ்சியில் அபூர்வமாகக் காட்சி அளிப்பவர் ------ வரதர் (3)
மேலிருந்து கீழ்
1. பண்பாட்டின் அடையாளமாக வீட்டு வாசல்களில் போடப்படுவது (5)
2. 108 திவ்யதேசங்களில் ஒன்றான --- கோயில் சென்றால் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை (6)
3. பாரதம் (4)
4. அரக்கனான -----மாரீசன் தன்னை மானாக மாற்றிக் கொண்டான் (3)
8. பாலம் கட்ட உதவிய அணிலை ராமபிரான் அன்புடன் விரல்களால் தடவ அதன் முதுகில் மூன்று ----- உருவாயின (4)
9. நாதஸ்வரத்தின் ஜோடியான மங்கல வாத்தியம் (3)
10. காரடையான் நோன்பு இடம்பெறும் ஆங்கில மாதம் (3)
11. கபாலி கோயிலில் ------வல்லியும் அருள்கிறார் (4)
12. தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் மறுபெயர் ---- நாராயணர் (3)
13. 'கொத்து அலர் பூங்குழல் ----கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா!' என்கிறது ஒரு திருப்பாவை வரி (5)
15. '------யே குருவே சரணம்' என்கிறது விநாயகனே வினை தீர்ப்பவனே என்று தொடங்கும் பாடலில் இடம் பெறும் ஒரு வரி (4)
18. ------வண்ணம் கொண்டவன் என ராமபிரான் வர்ணிக்கப்படுவதுண்டு (2)
Comments
Post a Comment