12/08/2022 | aanmeega malar kurukkeluthu potti | தினமலர் ஆன்மீக மலர் குறுக்கெழுத்து போட்டி


ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | ஆகஸ்ட் 12, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | August 12, 2022 | Dinamalar Aanmeega Malar

இடமிருந்து வலம்

1. அவ்வையிடம் முருகன் ‘சுட்ட பழம் வேண்டுமா? - ...... பழம் வேண்டுமா?' எனக் கேட்டான் (3)
4. பிரபல அமர்நாத் கோயில் உள்ள யூனியன் பிரதேசத்தின் தலைநகர் (4)
6. யஜுர் வேதத்தின் தலைசிறந்த பகுதியாகக் கருதப்படுகிறது சிவனின் பெருமையைக் கூறும் ........ (4)
7. அந்தாதி என்றதும் நினைவுக்கு வரும் அம்மனின் பெயர் (4)
9. சுக்ரீவனின் படையில் அங்கம் வகித்த கரடி (5)
11.ஏகாதசி, கார்த்திகை போன்ற நாட்களில் கணிசமானவர்கள் கடைப்பிடிப்பது (4)
13. 'தேடும் ....... செருவில் சாடும் தனி யானை சகோதரனே' என்கிறது கந்தர் அனுபூதி (6)
16. கர்ஜிக்கும் ராசி (4)
18. ......பூதி ஒரு பிரபல சமஸ்கிருதக் கவிஞர் (2)
19.வெங்கடவனின் மீது பல பாடல்களை இயற்றியவர் கவிஞர் ......ச்சார்யா (4)
21. முதல் தமிழ் மாதம் (4)
22. .....மகள் என்பது சரஸ்வதியைக் குறிக்கும் (2)

மேலிருந்து கீழ்

1. 'கௌசல்யா ....... ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே' எனப் தொடங்குகிறது வெங்கடேச சுப்ரபாதம் (4)
2. கேட்டதையெல்லாம் கொடுக்கும் கற்பகத் ....... (2)
3.பாரதப் போரில் களபலியாக அளிக்கப்பட்டவன் (4)
5.சைவ சமயப் பெரியவர்களில் ஒருவர் நம்பியாண்டார் ........(3)
7. முதல் திருக்குறளின் முதல் வார்த்தை (3)
8.தோடி அல்லது சிந்துபைரவி அல்லது கல்யாணி (3)
10. தன் கையை யார் தலையில் வைத்தாலும் அவர் எரிந்து போகவேண்டும் என்ற வரம் பெற்ற அரக்கன் (6)
11. தன் ..... தன்னைச் சுடும் (2)
12.இதைப் புரிந்து வரம் பெற்றவர்கள் பலர் (3)
13.சென்னை மயிலையில் உள்ளது பிரபல முண்டகக் ........ அம்மன் கோயில் (3)
14. வில்லிலிருந்து வெளிப்படுவது (2)
15. பாதி சேர்ந்தால் ராமாயணக் கழுகு. மதம்சேர்ந்தால் ஒப்புதல் (2)
16. '........... என்றிடத் தீவினை மாளும்' என்றார் திருமூலர் (4)
17. தசரதனின் ....... சுமந்திரர் (4)
19.இது எப்போது ஓய்வது? ஸ்னானம் எப்போது செய்வது? (2)
20. முருகனின் ......... லட்சுமிதேவி (2)

Comments