26/08/2022 | aanmeega malar kurukkeluthu potti | தினமலர் ஆன்மீக மலர் குறுக்கெழுத்து போட்டி


ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | ஆகஸ்ட் 26, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | August 26, 2022 | Dinamalar Aanmeega Malar

இடமிருந்து வலம்

1. மதுரை மீனாட்சியின் மணாளர் (6)
4. பழநியில் பிறந்த பிரபல சித்தர் (3)
7. பவுர்ணமியில் செய்யப்படுகிறது ------ பூஜை (7)
 8. சமஸ்கிருதத்தில் வால்மீகி ராமாயணமென்றால் தமிழில் -- ராமாயணம் (3)
10. நாரதர் கொண்டு வந்த இதன் காரணமாக சிவகுமாரர்களிடையே போட்டி உண்டானது (5)
13. பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்குமிடையே ---- போரில் தர்மம் வென்றது (3)
14. பிரும்ம ரிஷி பட்டம் கிடைப்பதற்கு முன்பாக விஸ்வாமித்திரருக்குக் கிடைத்த பட்டம் (4)
15. வானில் வடதிசையில் பிரகாசிக்கிறது ---- நட்சத்திரம் (3)
16. திருவாரூரில் தியாகராஜர் ஆடியது --------- நடனம் (3)
19. இடக்கால் துாக்கி ஆடிய ஈசனின் தலம் (3)
20. மயூரநாதர், அபயாம்பிகை அருளும் தலத்தின் முந்தைய பெயர் (5)

மேலிருந்து கீழ்

1. நரகத்தின் எதிர்ச்சொல் (5)
2. திருமாலின் இரண்டாவது அவதார உருவத்தை இப்படியும் கூறுவர் (5)
3. லட்சுமணனின் ----- ராமபிரான் (4)
5. '--- அபயம்' என்று திரவுபதி கதற, கண்ணன் உடனடியாக அவளுக்கு உதவினான் (3)
6. இந்த நாட்டில்தான் அஞ்ஞாத வாசத்தின் போது பாண்டவர்கள் மாறுவேடத்தில் தங்கினார்கள் (4)
9. ஸ்ரீமுஷ்ணத்தில் அருள் புரிகிறார் --------வல்லித் தாயார் (4)
10. 'துாமணி --------- சுற்றும் விளக்கெரிய' என்பது ஒரு திருப்பாவை வரி (4)
11. வெங்கடவனின் துணைவியார் (5)
12. பிரகதீஸ்வரர் கோயிலை எழுப்பியவன் சோழன் (4)
13. ' ------- வாகன மோதக ஹஸ்த' (3)
16.வருண் மற்றும் இந்த நதிகளிடையே அமைந்துள்ளது வாரணாசி (2)
17. ---------, ருக்மிணி ஆகிய இருவருமே கண்ணனின் மனதைக் கவர்ந்த வர்கள் (2)
18. --ரசர் என்பது அப்பர் பெருமானின் பெயர் (2)

Comments