02/09/2022 | aanmeega malar kurukkeluthu potti | தினமலர் ஆன்மீக மலர் குறுக்கெழுத்து போட்டி


ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | செப்டம்பர் 02, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | September 02, 2022 | Dinamalar Aanmeega Malar

இடமிருந்து வலம்

4. சுய பரிசோதனையை ..... விசாரணை என்று கூறுவதுண்டு (3)
6. அனுமன் சிறிய திருவடி என்றால் கருடன்? (3,4)
8. தேவலோக நடனமணிகளில் ஒருவர் (3)
9. பாடல்களை இயற்றுபவர் என்ற பொருள் கொண்ட இந்தச் சொல்லுக்கு குரங்கு என்றும் ஒரு பொருள் உண்டு! (2)
11. இதன் மீது ஏறி நின்றதால் பாண்டுரங்கனுக்கு விட்டலன் என்ற பெயர் வந்தது (4)
13. ஓலையோடு தடுத்தாட் கொள்ள வந்த சிவபெருமான் வாதி என்றால் சுந்தரர் யார்? (5)
14. நாரதர் என்றதும் பலரது மனங்களில் தோன்றும் வார்த்தை (4)
16. இலங்கையில் அனுமனின் --- பகுதிக்குத் தீ வைக்கப்பட்டது (2)
19. ........ காலத்தில் மட்டுமல்லாது எப்போதுமே கடவுளைத் துதித்தல் நல்லது (3)
20. ....... குலம் தழைக்கப் பிறந்தான் கண்ணன் (3)
21. '..... என் செயும், வினைதான் என் செயும்?' என்றார் அருணகிரிநாதர் (2)
22. மார்க்கண்டேயரின் தந்தை (5)

மேலிருந்து கீழ்

1. இதன் முகத்தில் முழித்தால் அன்று அதிர்ஷ்ட நாள் என்பதுண்டு (2)
2. 'அருட் ..... தெய்வம் என்னை ஆண்டு கொண்ட தெய்வம்' எனப்பாடினார் வள்ளலார் (2)
3. முனிவரின் முகத்தில் தெரிவது. குதிக்கும் உயிரினத்தைக் குறிக்கவும் பயன்படும் சொல்! (5)
5. நூற்றுவரை ஐவர் வென்ற கதையைக் கூறும் நுால் (6)
7. காலதேவனின் சகோதரி (2)
10. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர் ...... நாராயணர் (3)
11. நவக்கிரகங்களில் தெற்கு நோக்கிக் காணப்படுவது (4)
12. கம்ப ராமாயணத்தின் பல பிரிவுகளில் முதலாவது ...... காண்டம் (2)
13. முதற் கடவுள் (5)
14. எளிமையாக இதையே நைவேத்யமாகப் படைப்பவர்கள் உண்டு (5)
15. ..... முதலாய் காதல் பெருகுதடி, கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை ' (3,2)
17. ராமபிரான் பிறந்த திதி (3)
18. திருப்புங்கூர் சிவலோகநாதர் கோயிலில் தலவிருட்சமாக விளங்குவது .....மரம் (3) 

Comments