ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | செப்டம்பர் 09, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | September 09, 2022 | Dinamalar Aanmeega Malar
இடமிருந்து வலம்
6. பாண்டுரங்கனின் மறுபெயர் (5)
7. காந்தியிடமிருந்து வெளிப்பட்ட இறுதிச் சொல் (2)
8. இந்த சமஸ்கிருதச் சொல்லுக்கு எள் என்று பொருள் (3)
9. '......... களபச் செந்தாமரைப் பூம்பாதச் சிலம்பு பல இசை பாட' (3)
10. பரதனின் ....... தசரதர் (3)
11. 'சுற்றி நில்லாதே போ .......யே துள்ளி வருகுது வேல்' என்றார் பாரதியார் (2)
12. எல்லாம் ...... கடவுள் நமக்குத் துணையிருப்பான் (3)
13. சிவபெருமானின் கழுத்தில் தங்கியது (3)
14. திருவாலங்காடு, திருவெண்காடு ஆகிய சிவத்தலங்களின் தல விருட்சம் (2)
15. ஆண்டாளை ....... கொடுத்த சுடர்க்கொடி என்பர் (3)
17. திருமாலின் ஒரு பெயர் .......சூதனன் (2)
18. பீமனால் கொல்லப்பட்ட விராட மன்னனின் மைத்துனன் (4)
20. கோயில் மடப்பள்ளியில் இதைச் செய்வார்கள் (4)
21. தெய்வத்துக்கான சேவையை ....... உணர்வோடு செய்ய வேண்டும் (5)
மேலிருந்து கீழ்
1. எமதர்மனிடமிருந்து கணவன் உயிரை மீட்டவள் (5)
2. நந்தி தேவர் என்றால் மிருதங்கம். நடராஜர் என்றால்? (4)
3. .......கேசவப் பெருமாள் கோயிலின் காரணமாகத்தான் சென்னைக்கு அந்தப் பெயர் என்பவர்கள் உண்டு (3)
4. ....... நதியை ஜீவநதி என்பார்கள் (4)
5. கஜமுகன் என்பதால் பிள்ளையாரின் முகத்தில் இது இருக்கும் (5)
9. கவுசல்யையின் மருமகள் (2)
10. தொன்மையான கோயில்கள் ஒவ்வொன்றிற்கும் ....... புராணம் உண்டு (2)
11. ஹிந்து மதம் இந்த விலங்கை தெய்வமாக மதிக்கிறது (2)
12. '....... தாரோயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே' என்று சிவசக்தியை வேண்டினார் பாரதியார் (4)
13. திருமுருகாற்றுப்படையை எழுதியவர் - சிவபெருமானிடமே அஞ்சாதவர் (5)
15. தர்மத்தின் வாழ்வுதனை ........ கவ்வும் (2)
16. சீதையை ராவணன் அபகரிக்க மாரீசன் தரித்த வேடம் (2)
17. ஸ்தலசயனப் பெருமாள் கோயில் உள்ள பிரபல நகரின் சுருக்கம் (3)
19. முருகனின் வாகனத்தை ....... மயில் எனலாம் (3)
20. ஏழரை நாட்டான் (2)
Comments
Post a Comment