ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | செப்டம்பர் 16, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | September 16, 2022 | Dinamalar Aanmeega Malar
இடமிருந்து வலம்
1. 'வெள்ளைத் ....... பூவில் இருப்பாள்' என்று கலைவாணியைக் குறித்துப் பாடினார் பாரதியார் (3)
4.ஸ்ரீசைலத்தில் அருள்கிறார் ஜோதிர்லிங்கங்களில் ஒருவரான .......கார்ஜூனர் (3)
6. '........... ஒருநாளும் இருக்க வேண்டாம்' என்கிறது முருகப்பெருமானை வாழ்த்தும் உலக நீதிப் பாடல் (4)
7. மாதந்தோறும் வரும் இந்த நாளில் பெற்றோரை இழந்தவர் தர்ப்பணம் செய்வது வழக்கம் (4)
8. இப்போது நடைபெறும் யுகம் (2)
9. அர்த்த நாரீஸ்வரரை மாதொரு....... என்றும் குறிப்பிடலாம் (3)
12. திருமாலின் ஒரு திருநாமம் .......வன் என்பது (2)
16. வரவிடு என்ற வார்த்தைக்குள் சூரியன் (2)
17. 'கபாலியின் பவனியைக் ....... வேண்டும்' என்கிறார் பாபனாசம் சிவன் தனது பாடலில். (3,2,2)
20. '....... விரித்தேன் கொள்வார் இல்லை ' என்றார் வள்ளலார் (2)
21. பாண்டு, திருதராஷ்டிரர் ஆகியோரின் தம்பி (4)
23. பூம்புகாரின் காவல் தெய்வமாக விளங்கியவர் ......பதி (3)
24. ........ விஷயங்களில் மனதை செலுத்தாமல் பேரின்பத்தை நாடுவது நல்லது (3)
25. பிள்ளையார்பட்டியில் ....... விநாயகரைக் காணலாம் (4)
மேலிருந்து கீழ்
2. சமயபுர அம்மன் (4)
3. உமை மாதா என்றால் சிவபெருமான்? (2)
4. நாமக்கல் மலையடியில் உள்ள நரசிங்கப் பெருமாள் குகைக்கோயில், மாமல்லபுர மகிடாசுர மண்டபம் ஆகியவற்றை அமைத்த மன்னனை மா.......என்றும் அழைப்பார்கள் (4)
5. பெரும்பாலான கோயில்களில் சிவபெருமானின் வடிவம் (4)
6. கற்பூர ஆரத்தியின் போது மணி ........யைக் கேட்க முடியும் (2)
10. சித்ர குப்தரை அவரது பணியின் அடிப்படையில் இப்படிக் குறிப்பிடலாம் (5)
11. முருகனால் வதம் செய்யப்பட்டவன் (6)
13. தேவன் சேர்த்தால் மகாபாரத ஜோதிட நிபுணன் (2)
14. தஞ்சை ......... பல கலைஞர்களை உருவாக்கியுள்ளது (2)
15. நடராஜரின் ஒரு பெயர் (6)
18. .....யெழு வள்ளல்களில் ஒருவன் பாரி (2)
19. .........குடி என்பது பழநியைக் குறிக்கிறது (4)
22. ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் அருளும் திருமாலின் பெயர் ...... மன்னார் (3)
23. ........ காலத்திலேயே நால்வகை நிலங்களிலும் தெய்வ வழிபாடு இருந்திருக்கிறது (3)
Comments
Post a Comment