23/09/2022 | aanmeega malar kurukkeluthu potti | தினமலர் ஆன்மீக மலர் குறுக்கெழுத்து போட்டி


ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | செப்டம்பர் 23, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | September 23, 2022 | Dinamalar Aanmeega Malar

இடமிருந்து வலம்

1. பிரபல கிருஷ்ண பக்தை (2)
3. அஷ்ட லட்சுமிகளில் நெற்கதிரை ஒரு கரத்தில் தாங்கி நிற்பவள் - லட்சுமி (3)
5. '........ மண்ணாகி வளியாகி' எனத் தொடங்கும் திருவாசகப் பாடல் (3)
7. வியாசரின் தாயின் இயற்பெயர் ......கந்தி (3)
8. ஜீயர் பொறுப்புகளையும், அஷ்டதிக் கஜங்களையும் (எட்டுப்பேர் அடங்கிய குழு) உருவாக்கியவர் மாமுனிகள் (4)
9. திருமாலின் கரங்களில் ஒன்றில் சக்கரத்தையும் மற்றொன்றில் இதையும் காணலாம் (3)
10. புத்திமான் .......வான் ஆவான் (2)
14. சிவன் திருமால் ஆகிய இருவரும் இணைந்த பெயர் (7)
15. ராமனின் புத்திரர்கள் ......குசர் (2)
18. தெய்வ ........ கொண்டவர்கள ஆத்திகர்கள் (5)
21. அக்னியைத் தீ என்றால் காற்றை இப்படிக் கூறலாம் (2)
22. 'இன்று ....... வா' என ராமன் பெருந்தன்மையாகக் கூற ராவணன் மனம் குன்றினான் (2,2)
24. திருமகள் அருள் புரிந்தால் பிச்சைக்காரனும் இப்படி ஆகலாம் (6)
25. பலி (2)

மேலிருந்து கீழ்

2. பெரும் சிவபக்தன். ஆனால் பெண் மோகத்தால் வீழ்ந்த அரசன் (4)
3. பிரபல பக்திக் கவிஞர் அன்னமாச்சார்யா ........பாக்கம் என்ற கிராமத்தில் பிறந்தவர் (3)
4. காலதேவனின் சேவகர்களை இப்படிக் குறிப்பிடுவதுண்டு (7)
5. திருமாலின் இதயப் பகுதியில் ....... செய்கிறாள் திருமகள் (3)
6. பவுர்ணமி என்றதும் அண்ணாமலை பக்தர்கள் மனதில் தோன்றும் வார்த்தை (5)
11. வேயுறு தோளிபங்கன் எனத் தொடங்கும் கோளறு பதிகத்தில் இடம் பெறும் வார்த்தைகள் 'ஆசறு ...... அவை ...... அடியாரவர்க்கு மிகவே ' (3,3)
12. '.......... குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்' என்கிறது திருப்பாவையின் ஒரு வரி (4)
13. சந்திரனின் மறுபெயர் (3)
16. 'சர்...... சக்திமயம்' (2)
17. உக்கிரமான பெண் தெய்வம் (2)
19, சிவபெருமானை ......டனர் என்றும் அழைப்பதுண்டு (3)
20. மணிகண்டனின் வளர்ப்புத் தாய் .......வாய்ப்பட்டதாக நடிக்க, அதை குணமாக்க புலிப்பால் தேவை என்றார் மருத்துவர்! (2)
21. முதுகில் ....... கொண்ட மந்தரை கைகேயியின் மனதைக் கலைத்தாள் (3)
22. ஞான மரம் (2)
23. அர்ஜுனனை நோக்கி ஒருமுறை மட்டுமே ....... ஸ்திரத்தை செலுத்த வேண்டுமென்று கர்ணனிடம் குந்தி வரம் கேட்டாள் (2)

Comments