25/09/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று செப்டம்பர் 25, 2022 | Sunday | தினமலர் | dinamalar crossword answers today | September 25, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. பனங்காட்டு நரி .....க்கு அஞ்சாது.
3. லீஸ் என்றால் குத்தகை; அப்போ ரென்ட் என்றால் ......
12. மீனவர் வாழும் சிற்றுார்.
15. கடவுள், தான் எல்லா இடத்திலும் இருக்க முடியாது என்பதற்காக படைக்கப்பட்டவள்.

வலமிருந்து இடம்

4. குணத்தில் சிறந்தவரை சொக்கத் ..... என்று புகழ்வதுண்டு; விஜயகாந்த் நடித்திருந்த திரைப்படமும் கூட.
8. கூட்டத்திற்கு வந்திருந்தவர்களின் ..... குறைந்திருந்தது.
9. ஆன்றோர் சொல் .....
10. .... சொன்னா ரசிக்கணும், ஆராயக் கூடாது; முதுமொழி.
11. அரண்மனையில் ராணியின் இருப்பிடம் அந்தப்......; கலைந்துள்ளது.
14. வேலையில் சலிப்பு ஏற்பட்டதால், .......ப ஓய்வு பெற்றான்.
16. இனிமையாக பாடும் பறவை.
18. கப்பல், மரக்கலம்.
20. ...... இரண்டு நாள் விடுமுறை வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
21. குண்டூர் ...... ரொம்பவே காரம்.

மேலிருந்து கீழ்

1. ...... மேதை என்றழைக்கப்பட்டவர் பி.ஆர்.அம்பேத்கர்.
2. சூரியன் மட்டுமல்ல, மகனையும் ஆங்கிலத்தில் இப்படித்தான் சொல்வர்.
3. வீடு ....., விற்க இங்கு அணுகவும் _ ரயில் எஸ்டேட் விளம்பரம்.
5. தின்பண்டம் ஒன்று.
6. அசுத்தம்; கறை.
7. தசரதனிடம் வரம் பெற்றுக் கொண்ட மனைவி, கடைசி எழுத்து இல்லை.
13. உப்பில்லாப் ...... குப்பையிலே.
14. பழங்கால போர் ஆயுதம் ஒன்று.
18. மனிதனிடம் தன் நன்றியை காட்டும் விலங்கு.

கீழிருந்து மேல்

4. பதவி உயர்வு கிடைத்ததற்காக .....புடலாக விருந்து வைத்தான்
8. ஒன்றன் பின் ஒன்றாக ஒரு ஒழுங்கு முறையில் வரிசையாக செல்வது .....க்கே உரிய குணம்.
17. வேலை ...... குறைவாக உள்ளது.
19. முப்பால் பகுப்பு கொண்ட நுால்களுள் ஒன்று.
20. தவணை; கெடு வைத்த நாள்.

Comments