28/09/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று செப்டம்பர் 28, 2022 | Wednesday | தினமலர் | dinamalar crossword answers today | September 28, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. கரும்புச் சாற்றை காய்ச்சி தயாரிக்கப்படும் இனிப்பு.
2. மழைக்காலம் என்றும் சொல்லலாம்.
5. அக்காலத்தில் எழுத்தாணி கொண்டு ஓலைச் .....யில் எழுதுவர்.
6. பகைவன்.
7. மருந்து என்பதன் துாய தமிழ்ச் சொல்.
13. நாம் பொருட்களை வாங்கும் இடம்.
14. ஏழையின் சிரிப்பில் ...... காண்போம்.
16. மாலை அல்ல.
17. விவசாயக் கருவி ஒன்று ......பை.
18. பவனி வருதல்.
20. புல்லாங்குழல் கொடுக்குமாம் ......கள்.

வலமிருந்து இடம்

3. .....வெளி ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
4. அகத்தின் அழகு ......த்தில் தெரியும்.
9. ...... முதல் பாதம் வரை அழகோ அழகு.
12. குடுவை.
19. மரங்களின் தொகுப்பு.
21. கோடை காலத்தில் நீரின்றி நீர் நிலைகள் ..... போய் விடும்.

மேலிருந்து கீழ்

1. பாலிலிருந்து தயிர் மட்டுமல்ல, இதுவும் கிடைக்கும்; கிருஷ்ணருக்கும் பிடிக்கும்.
4. அவன் ..... சூடா மன்னனாக இருந்தான்.
8. ..... செய்தவன் தண்டனை பெறத்தான் வேண்டும்.
10. காகம் விரும்பிய ஒரு தின்பண்டம்.
13. குதிரை எழுப்பும் ஒலி.
15. இடது எதிர்ச்சொல் .....து.
16. என்னடி மீனாட்சி நீ சொன்ன வார்த்தை ..... போயாச்சா...

கீழிருந்து மேல்

3. ......லாதி வில்லன் _ சத்யராஜ் நடித்திருந்த திரைப்படம்.
7. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்' எனக் கூறியவர்
9. உவமேயத்தையும், உவமானத்தையும் வேறுபாடில்லாது கூறும் அணி இலக்கணம்.
11. பின் கழுத்து.
12. குதித்து ஆடுதல்.
14. காய்ந்த ..... தான் சுக்கு.
17. பொதுவாழ்க்கையில் உள்ள கரங்கள் ......படியாத கரங்களாக இருக்க வேண்டும்.
20. இரண்டுக்கு அடுத்து வருவது.
21. அரசர்கள், முன்னோர்கள், சாதனை புரிந்தவர்கள் பற்றி சொல்வது.

Comments