ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | செப்டம்பர் 30, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | September 30, 2022 | Dinamalar Aanmeega Malar
இடமிருந்து வலம்
1. ராமானுஜரின் தானான திருமேனி உள்ள தலம் (5)
4. பனாரஸ் என்று அழைக்கப்பட்ட தலம் (2)
5. ' ........தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுதும் தருவோய் நீ' என்று உருகுகிறார் மாணிக்கவாசகர் (4)
6. செல்வத்துக்கு அதிபதி (4)
8. இதன் பரிணாம வளர்ச்சி என்று வீணையைக் கூறலாம் (2)
9. 'சின்னக் குழந்தை ....... போற்றி' என்கிறது கந்த சஷ்டி கவசம் (3)
10. விட்டலனின் பரம பக்தர்களில் ஒருவர் (5)
11. 'அழைக்கிறான் மாதவன், ....... மேய்த்தவன்' (3)
12. இதன் முன்பு பரசு சேர்ந்தாலும் அவதாரம், பல சேர்ந்தாலும் அவதாரம் (3)
13. விருச்சிக .......யில் அவதரித்தார் காஞ்சி மஹாபெரியவர் (2)
15. 'வான்' இணைந்தால் கடவுள் (2)
17. கோயிலில் கடவுள் துயில் கொள்ளும் இடம் (5)
18. காட்டுக்குச் செல்லுமாறு கைகேயி கூறிய போதும் ராமனின் ....... சிறிதும் சுருங்கவில்லை (4)
19. இது அகங்காரத்தைக் குறிக்கும் சொல் என்கிறார்கள் ஞானியர் (2)
20. ஏகலைவன் குருதட்சணையாக அளித்தது தனது கட்டை ....... (3)
21. பங்குனிக்கு முந்தைய தமிழ் மாதம் (2)
மேலிருந்து கீழ்
1. பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களின் ஒன்றான இது ஆந்திராவில் உள்ளது (4)
2. நற்காரியங்களுக்கு உதவுவதில் .........த்தனம் கூடாது (3)
3. திருநந்திபுர .......ணகரம் தட்சிண ஜகன்னாதம் எனப்படுகிறது (2)
4. சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள தொன்மையான கோயிலின் முக்கிய பெண் தெய்வம் (5)
5. இந்தக் குலத்தை சேர்ந்த கண்ணப்பர் தன் உளமார்ந்த பக்தியால் நாயன்மார்களில் ஒருவரானார் (4)
7. கண்ணனின் இளவயதுத் தோழன் (4)
9. முருகன் கொடியில் காணப்பெறும் பறவை (3)
10. சரஸ்வதிதேவியின் மறுபெயர் (4)
11. வணங்கும் சிறியவர்களுக்குப் பெரியோர் அளிப்பது (2)
13. தசரத மைந்தன் இப்படியும் அழைக்கப்படுகிறார் (4)
14. மீனாட்சி அம்மனை அங்.... கண்ணி என்றும் குறிப்பிடுவதுண்டு (3)
16. ராமபிரானின் மாமனார் (4)
17. இறந்தார் என்பதை சிவலோக....... அடைந்தார் என்பதுண்டு (3)
19. லட்சுமணனால் வெட்டப்பட்ட சூர்ப்பனகையின் உடற்பகுதி (2)
Comments
Post a Comment