ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | அக்டோபர் 07, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | October 07, 2022 | Dinamalar Aanmeega Malar
இடமிருந்து வலம்
1. வேலவனின் ஒரு திருநாமம் (5)
3. திருவாரூரில் உள்ள பிரம்மாண்டமான குளத்தின் பெயர் .......லயம் (3)
5. '........குறிஞ்சி நிலம் வாழ்பவனே கந்தா' என்கிறார் சீர்காழி கோவிந்தராஜன் ஒரு பாடலில் (4)
6. துரியோதனின் தங்கை கணவன் (6)
9. வைணவக் கோயில்களில் நாலாயிர திவ்யப் பிரபந்த பாடல்களை அபிநயத்துடன் ஆடிப் பாடும் நிகழ்ச்சியை ......சேவை என்பார்கள் (4)
12. தனது ......... காலத்தில் தசரதனின் அருகே ராமபிரான் இல்லாத நிலை உருவானது (4)
13. கர்ணன் சேர்த்தால் ராமாயணப் பாத்திரம். கோணம் சேர்த்தால் பிரபல தஞ்சைத் தலம் (3)
15. சிவலிங்கத்தின் கண்ணிலிருந்து இது வழிந்ததைக் கண்ட கண்ணப்பன் மனம் பதறினான் (4)
16. கோடரியைக் கையில் ஏந்திய அவதாரம் (6)
19. வரப்புயர நீர் உயரும் .... கோல் உயரக் ....... உயர்வான் (2)
20. தும்புரு என்ற தேவலோகக் கலைஞரின் மகளான இவள் அடுத்த பிறவியில் காரைக்கால் அம்மையானார் (3)
21. ஓர் அரக்கனைக் கொன்றதால் துர்கை - ........மர்த்தினி என அழைக்கப்பட்டார் (5)
மேலிருந்து கீழ்
1. மகாபாரதப் போரின் நிகழ்வுகளை திருதராஷ்டிரனுக்கு அறிவித்தவன் (5)
2. விநாயகரை யானை ........ என்பர் (5)
3. கன்னியாகுமரி அம்மனின் வைரமூக்குத்தி கப்பல் மாலுமிகளுக்கு ........ விளக்கம் போல் பயன்பட்டது என்பார்கள் (5)
4. ...... கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு ! (2)
5. விருத்தாசலம் விருத்தகிரி கோயிலின் தலவிருட்சம் (3)
7. பண் பாடுபவரை சங்க காலத்தில் இப்படிக் குறிப்பிட்டனர் (3)
8. திருப்பதி, காளஹஸ்தி ஆகிய தலங்கள் அமைந்த மாநிலத்தை இப்படிச் சுருக்கமாக அழைத்ததுண்டு (4)
9. தேவர்களைக் குறிக்கும் சொல் (4)
10. உரிய காலத்தில் உயிரை எடுப்பவன் (6)
11. நிசும்பசூதனி அழித்த இரு அரக்கர்களில் ஒருவன் (4)
14. ராமனின் பாதுகைகளை வைத்து அரசாண்ட வன் ........தன் (2)
17. அசுர குரு .......ராச்சாரியார் (3)
18. பிரபல தர்மஸ்தலா கோயிலில் அருள்புரிகிறார் ........நாதர் (3)
19. 'பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல ..... நூறாயிரம்' (2)
Comments
Post a Comment