02/12/2022 | aanmeega malar kurukkeluthu potti | தினமலர் ஆன்மீக மலர் குறுக்கெழுத்து போட்டி


ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | டிசம்பர் 02, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | December 02, 2022 | Dinamalar Aanmeega Malar

இடமிருந்து வலம்

1. பிரம்மாவை தாய்லாந்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்கள் (4)
4. நவக்கிரகங்களில் கடைசியாகக் குறிப்பிடப்படுபவர் (2)
7. ஆண்டாள் ----- நோன்பு நோற்றாள் (2)
9. ....... பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார் (4)
10. '...... வர்விண்டிலர்' என கடவுள் அனுபவத்தைக்கூறுவர் (3)
11. ............ வாகன ஆண்டு என்பதை சக ஆண்டு என்றும் கூறுவதுண்டு (2)
12. ........... ஒன்றுமில்லை மறைமூர்த்திக் கண்ணா' (2)
13. கன்னியாகுமரி முனையை .......... சங்கமம் எனலாம் (3)
14. ......கற்றவர்க்குத் தெய்வமே துணை (2)
15. தாடகையோடு இந்த அரக்கனையும் வதம் செய்தார் ராமபிரான் (3)
17. அபிராமி பட்டர் இயற்றியது அபிராமி ............. (4)
19. பார்வதி தேவியை ............. மகள் என்பதுண்டு (2)
22. விஷ்ணுவின் கரத்தில் உள்ளதை நினைவுபடுத்தும் மலர் (7)
24. ............ விட்டுத் துங்குபவர்களை கும்பகர்ணன் போல் துாங்குவதாகக் குறிப்பிடுவார்கள் (4)

மேலிருந்து கீழ்

1.ஐயனார் ------யாகவும். கருதப்படுவதுண்டு (5)
2. ' ....... கணபதிம் பஜேகம்' (3)
3. ஷிர்டி. புட்டபர்த்தி ஆகியவற்றில் அதிகம் ஒலிக்கும் நாமம் (2)
5. .......... கண்டால் துார விலகு (5)
6. 'நம் எல்லோருக்குத் தந்தை இறைவன்' என்றார் ........ கண்ணதாசன் (5)
8.'........... யாமம் துயில் எழுந்து'எனத்தொடங்குகிறது நல்லொழுக்கத்தை போதிக்கும் ஒரு ஆசாரக்கோவை பாடல் (3)
12. காவிரி பிறக்குமிடம் (3)
13.தர்ம ........ என்பது ஐயப்பனைக் குறிக்கும் சொல் (3)
14. சிவகாமி மணாளனின் தலம் (3)
16. கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தும் நாத்திகவாதிகள் போல் ......... செய்பவர்கள் உண்டு (4)
17.'........யும் சிவனும் ஒண்ணு. இதை அறியாதவர்கள் வாயில் மண்ணு' (2)
18. விபீஷணனின் மகள் (4)
19. மகேஸ்வரன் என்பதை இப்படி சுருக்கிக் கூப்பிடுவதுண்டு (3)
20. கேரளாவில் பாயும் புண்ணிய நதி (3)
21. 'கிட்டாதாயின் வெட்டென .........' (2)
23. வலம்..... சங்கு விசேஷமானது (2)

Comments