20/01/2023 | aanmeega malar kurukkeluthu potti | தினமலர் ஆன்மீக மலர் குறுக்கெழுத்து போட்டி


ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | ஜனவரி 20, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | January 20, 2022 | Dinamalar Aanmeega Malar

இடமிருந்து வலம்

3. பாலை நிலத்தின் தெய்வம் (4)
4. ராசிகளின் எண்ணிக்கை ....... முருக பெருமானின் கரங்களின் எண்ணிக்கையும் கூட (6)
6.திருவிழா,கூழ், அம்மன், ஒலிபெருக்கியில் பாடல்கள் என்றவுடன் நினைவுக்கு வரும் மாதம் (2)
7. உடலின் முக்கிய நாடி, நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக கொண்ட ஒரு தற்காப்புக் கலை (4)
8. சமணர்களால் போற்றப்படும் 24 தீர்த்தங்கரர்களுள் முதலாமவரான ரிஷபதேவரின் பிரபல இரண்டாவது மகன் (4)
10. விசேஷ நாட்களில் இதனால் தோரணம் செய்து வாசல்படியில் தொங்கவிடுவர் (3) 
11. ........க்கலை என்பது ஒருவருடைய கைரேகையைத் கொண்டு, அவரைப்பற்றி ஏற்கனவே எழுதிவைக்கப்பட்டுள்ள ஏடுகளை அடிப்படையாகக் கொண்டது (5)
15. ஆவணி ரோகினி அஷ்டமியில் பிறந்தவன் (4)
18. ஒருவரது ஜென்ம ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் நிலைபெறுவதை இப்படி குறிப்பிடுவர் (8)
19. ஒரு காலத்தில் காவிரி நதி ....... புரண்டு ஓடியது (2)

மேலிருந்து கீழ்

1. ராஜகோபால சுவாமி அருளும் தலம் (6)
2. காவியம் _ தேசம் (4)
3. தசராவின் போது ராவணனின் இதை தீயில் கொளுத்துவார்கள் (5)
5. ரிஷிகள் முகத்தில் காணப்படுவது (2)
6. இதன் மீது படுத்தபடி குழந்தைக்கண்ணன் தன் கட்டை விரலை வாயில் வைத்திருக்கும் அழகே அழகு (3)
9. வாழை ...... தள்ளும் (2)
10. ராமபிரான் சாலையில் நடக்க, இதில் நின்றபடி சீதை அவரை முதன்முதலாக பார்த்தாள் (3).
11. அப்பரின் மற்றொரு பெயர் (5)
12. அருட்பெரும் ....... தனிப்பெரும் சுருணை (2)
13. ராமனின் இளவயதைச் சித்தரிப்பது பால ........(4)
14. ஆதிசிவன் தலைமை தாங்கிய முதல் தமிழ்ச்சங்கம் இங்கு இருந்தது என்பர் (5)
16. திருச்சிக்கு அருகே உள்ளது முருகத்தலமான ........மலை (3)
17. காவிரியின் தாயகம் (3)

Comments